Chris Lynn : தோனியை தொடர்ந்து ஏமாந்த ராஜஸ்தான் வீரர் – வீடியோ

ஐ.பி.எல் தொடரின் 21 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும்

RR
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 21 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

Rahane

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெறும் 139 ரன்களை மட்டுமே அடித்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 53 பந்துகளில் 73 ரன்களை அடித்தார். அவரை தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் மிக பொறுமையாக ஆடியதே அணியின் இந்த குறைவான ரன் கணக்கிற்கு காரணமாக அமைந்தது.

பிறகு ஆடிய கொல்கத்தா அணி இந்த 140 ரன்கள் இலக்கினை 13.5 ஓவர்களில் எளிதாக கடந்து வெற்றி பெற்றது. இதனால் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி சார்பாக க்றிஸ் லின் 50 ரன்களை அடித்தார்.

- Advertisement -

lynn1

இந்த போட்டியில் க்றிஸ் லின் 13 ரன்கள் எடுத்திருந்த பொது குல்கர்னி பந்துவீச்சில் பேட்டில் பட்டு போல்ட் ஆனார். அனால், பைல்ஸ் விழாததால் அம்பயர் பவுண்டரி சிக்னலை கொடுத்தார். இதனால் குல்கர்னி மற்றும் ராஜஸ்தான் அணி வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதோ அந்த வீடியோ :

கடந்த போட்டியின்போது தோனி த்ரோ செய்தபோது கூட பைல்ஸ் விழாமல் இருந்ததால் ராகுல் அவுட் ஆகாமல் தப்பியது குறிப்பிடத்தக்கது.

Advertisement