தோனி கூட இருந்தாலே பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். மெய் சிலிர்க்கும் – தோனியை புகழ்ந்த இளம்வீரர்

CSK
- Advertisement -

தென்னாபிரிக்க அணியின் இளம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லுங்கி இங்கிடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இடையில் 2019ஆம் ஆண்டு தனக்கு ஏற்பட்ட சிறிய காயத்தினால் அந்த ஆண்டுக்கான தொடரை லுங்கி இங்கிடி தவறவிட்டார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மொத்தம் பதினோரு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -

அதற்கு அடுத்தபடியாக 2020ஆம் ஆண்டு ஆன சென்ற ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மொத்தமாக 9 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் இந்த வருடமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆட உள்ள லுங்கி இங்கிடி டோனி உடனான தனது அனுபவத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். தோனியுடன் நான் விளையாட இது எனக்கு கிடைத்த பாக்கியம் தான். அவரிடம் எப்பொழுதுமே ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்து கொண்டே இருக்கும். அந்தப் பாசிட்டிவ் எனர்ஜி நமக்கு பாசிட்டிவிட்டியை தரும்.

அவருடன் இன்னும் சற்று நாட்களில் இணைந்து விளையாட போவதை நினைத்தால் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் எப்பொழுதும் அவருக்குக் கீழ் விளையாடுவதில் ஆனந்தம் கொள்வேன் என்று மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் தோனி எப்பொழுதும் அவரது அணியில் விளையாடும் வீரர்களை எப்போதும் கூர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பார்.

ngidi

அவர்களுக்கு என்ன தேவை என்பதை நன்கு புரிந்து கொண்டு அதை அவர்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வார். வீரர்களின் விளையாட்டு திறனை மேலும் அதிகரிக்க அவர் எப்போதும் ஆலோசனை வழங்கி கொண்டே வருவார். தோனியின் ஆரா அனைவருக்கும் சிறப்பான எனர்ஜியை கொடுக்கும் என்றும் அவருடன் இணைந்து விளையாடும்போது தன்னுடைய மெய் சிலிர்ப்பதை தன்னால் உணர முடியும் என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Dhoni

சீனியர் வீரர் என்கிற எண்ணம் துளி அளவு கூட இல்லாமல் எல்லா வீரர்களையும் சக வீரர்களை போல அவர் அரவணைக்கும் விதம் எனக்கு எப்போதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.மைதானங்களில் மட்டுமல்லாது எப்பொழுதுமே அவர் கூல் தோனி தான் என்று லுங்கி இங்கிடி கூறியுள்ளார்.

Advertisement