நான் பாதத்துலேயே இந்த ஒரு விஷயத்துல தோனியை அடிச்சிக்க ஆளில்ல – லுங்கி நெகிடி புகழாரம்

Lungi
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர முன்னாள் வீரர் மற்றும் கேப்டன் எம்.எஸ் தோனி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த கேப்டனாக கருதப்படுகிறார். கிரிக்கெட்டில் 50 ஓவர் உலகக்கோப்பை 20 ஓவர் உலககோப்பை என அவர் வெல்லாத கோப்பைகளே கிடையாது என கூறலாம். ஐபிஎல் தொடரிலும் கூட 4 முறை கோப்பைகளை வென்று ஐபிஎல் வரலாற்றில் ஒரு வெற்றிகரமான கேப்டனாக இருந்து வருகிறார். கடைசியாக 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற அவர் ஐபிஎல் தொடரில் இன்னும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

Dhoni-3

- Advertisement -

மாஸ்டர் கேப்டன்:
அதிரடியான பேட்டிங், மின்னல் வேக விக்கெட் கீப்பிங் என பல பரிணாமங்களை கொண்ட எம்எஸ் தோனி மிகவும் இக்கட்டான நேரங்களில் சரியான முடிவு எடுப்பதில் வல்லவனுக்கு வல்லவன் என கூறலாம். 2007 உலககோப்பையின் பைனல் ஓவர் முதல் 2010 ஐபிஎல் பைனலில் பொல்லார்ட் விக்கெட்டை எடுத்தது வரை முக்கியமான தருணங்களில் எடுத்த சரியான முடிவுகளால் அவர் பல சரித்திர வெற்றிகளை பெற்றுள்ளார்.

அதேபோல் ஒரு கேப்டனாக அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு தேவையான ஆதரவு அளித்து அவர்களை உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக உயர்த்திய பெருமையும் தோனிக்கு உள்ளது. எடுத்துக்காட்டாக மிடில் ஆர்டரில் தவித்து கொண்டிருந்த ரோகித் சர்மாவை ஓபனிங் வீரராக களமிறக்கியது, டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறிய விராட் கோலிக்கு அதிகப்படியான ஆதரவு கொடுத்தது போன்ற அம்சங்களை கூறலாம்.

வியக்கும் லுங்கி நிகிடி:
இந்திய வீரர்கள் மட்டுமல்லாது டுவைன் பிராவோ உள்ளிட்ட பல வெளிநாட்டு வீரர்களின் வளர்ச்சிக்கும் உதவிய தோனியை பற்றி அவர்களே பலமுறை மனம்விட்டு கூறியுள்ளார்கள். அந்த வரிசையில் தென்ஆப்பிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடியும் தற்போது இணைந்துள்ளார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் கடந்த சில ஆண்டுகளாகவே எம்எஸ் தோனியின் தலைமையில் விளையாடி வரும் அவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஐபிஎல் பைனலில் எம்எஸ் தோனி எடுத்த ஒரு முடிவை பார்த்து வியந்ததாக கூறியுள்ளார். இது பற்றி அவர் மனம் திறந்து பேசுகையில்,

lungi

“ஐபிஎல் 2018 பைனலில் ஹைதராபாத் அணிக்கு எதிராக நான் பந்துவீசிய போது பீல்டிங்கை எந்த இடத்தில் செட் செய்வது என்பது பற்றி நாங்கள் பேசவில்லை. ஆனால் தோனி தாமாகவே சரியான இடத்தில் பீல்டர்களை நிறுத்தியதால் அதற்கடுத்த ஒரு சில பந்துகளிலேயே நான் விக்கெட்டை எடுத்தேன். அந்த பைனலை பொறுத்தவரை இந்த ஒரு தருணம்தான் இன்னும் எனது மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. ஏனெனில் பைனல் போன்ற மிகப்பெரிய போட்டியில் கேப்டனாக அவர் செயல்படுத்திய திட்டத்தால் எந்த இடத்தில் பந்து வீச வேண்டும் என்ற மிகப்பெரிய தன்னம்பிக்கை எனக்கு கிடைத்தது.

- Advertisement -

அத்துடன் அப்போட்டி எப்படி செல்ல போகிறது என்பதை அவர் எப்படி பார்க்கிறார் என்பதன் அடிப்படையில் அவர் ஆட்டத்துடன் எப்படி இணக்கமாக இருக்கிறார் என்பதை அந்த தருணம் எனக்கு காட்டியது. மேலும் நான் என்ன நினைக்கிறேன் என்பதை கணித்து சரியாக புரிந்து கொண்டு அதற்கேற்றார்போல் அவர் செயல்பட்டார்” என கூறியுள்ளார்.

lungi 1

மேலும் களத்தில் ஒரு பந்து வீச்சாளர் என்ன நினைக்கிறார் என்பதை கணித்து அதற்கு ஏற்றார் போல பீல்டிங்கை செட் செய்வதில் தோனியின் திறமையை பார்த்து ஆச்சரியமடைவதாக தெரிவித்துள்ளார். பொதுவாகவே ஒரு விக்கெட் கீப்பராக இருப்பதாலும் நீண்ட காலமாக கேப்டனாக இருப்பதாலும் களத்தில் ஒரு பேட்ஸ்மேன் மற்றும் பவுலர் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றி கணிப்பது தோனிக்கு மிகவும் சுலபமான ஒன்றாகும்.

- Advertisement -

லுங்கி நிகிடி கூறும் ஐபிஎல் 2018 பைனலில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. அதில் 4 ஓவர்கள் வீசிய லுங்கி நிகிடி 26 ரன்கள் கொடுத்து தீபக் ஹூடாவின் விக்கெட்டை எடுத்தார். இறுதியில் அந்த போட்டியில் ஷேன் வாட்சன் அதிரடி சதத்தால் 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங் சாதனை படைத்தது.

இதையும் படிங்க : இந்த தமிழக வீரர் யூசுப் பதான் மாதிரி ஆடுறாரு. அவரு ஏலத்தில் பல கோடிக்கு போவாரு – ஹர்ஷா போக்ளே

வளர்ச்சிக்கு உதவிய தோனி:
“அணியிலும் களத்திலும் அவர் காட்டும் கட்டுப்பாடுகள் தான் மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன். அவர் எப்போதும் அமைதியை கொண்டு வருபவராக உள்ளார். அவர் தலைமையில் சிஎஸ்கே அணியில் விளையாடிய போது நானும் நிறைய கற்றுள்ளேன். குறிப்பாக பீல்டிங்கை செட் செய்வது, போட்டியின் திட்டம் மற்றும் அந்த இன்னிங்சில் எப்படி எனது பந்துவீச்சை திட்டமிடுவது போன்ற அம்சங்களை கற்றுள்ளேன். அந்த தருணங்கள் நான் ஒரு நல்ல கிரிக்கெட்டராக வளர உதவியது”

என தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய அனுபவம் பற்றி தெரிவித்துள்ள லுங்கி நிகிடி அவர் தலைமையில் விளையாடியதால் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக வளர முடிந்தது என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். கடந்த 2018 – 2021 வரை சென்னை அணியில் விளையாடிய அவர் 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். ஐபிஎல் 2022 சீசனில் அவரை சென்னை நிர்வாகம் தக்க வைக்காததால் மெகா ஏலத்தில் லுங்கி நிகிடி பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement