இந்த தமிழக வீரர் யூசுப் பதான் மாதிரி ஆடுறாரு. அவரு ஏலத்தில் பல கோடிக்கு போவாரு – ஹர்ஷா போக்ளே

Bhogle
- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருக்கும் 15-வது ஐபிஎல் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் இறுதியில் துவங்கி மே மாதம் இறுதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்திருந்தார். அதன்படி தற்போது இந்த ஐபிஎல் தொடர் காண இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்கள் அணியில் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ள வேளையில் வீரர்களுக்கான புதிய மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது.

Auction

- Advertisement -

இந்த மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்வார்கள். அதன்படி இந்த மெகா ஏலத்தில் பங்கேற்க 1214 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். அப்படி பதிவு செய்துள்ள இந்த வீரர்களின் பட்டியலில் 2 இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என்று வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

தற்போது நடைபெற உள்ள இந்த ஏலத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் அதிக விலைக்கு ஏலம் போவார். ஏனெனில் தொடக்க வீரரான அவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பது மட்டுமின்றி இந்திய வீரர் என்பதனால் அவருக்கு மவுசு அதிகமாக இருக்கும். அதே போன்று மற்றொரு தமிழக வீரரான ஷாருக் கானுக்கு ஏலத்தொகை நிச்சயம் பல கோடிகளுக்கு செல்லும்.

shahrukh

ஏனெனில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான் மாதிரி ஷாருக் கான் அதிரடியாக பேட்டிங் செய்யும் திறன் உடையவர். அதோடு கடந்த சீசனில் அவர் தனது அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி பஞ்சாப் அணியில் தனது திறமையை நிரூபித்தார். அதுமட்டுமின்றி தற்போது இந்தியாவில் நடைபெற்ற உள்ளூர் தொடர்கள் அனைத்திலும் தனது அதிரடி வெளிப்படுத்தி அற்புதமான பார்மில் இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பே இதுதான். இந்த தொடரை நடத்த மாட்டீங்களா? – ரவிசாஸ்திரி ஆதங்கம்

இதன் காரணமாக கடந்த ஐபிஎல் ஏலத்தில் போது 5 கோடிக்கு ஏலம் போன ஷாருக்கான் இம்முறை அதை விட சில மடங்கு அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்பு உள்ளது. எந்த ஒரு அணிக்கு நல்ல பினிஷர் தேவைப்படுகிறதோ அந்த அணி நிச்சயம் அவரை ஏலத்தில் எடுக்க முயற்சிக்கும் என ஹர்ஷா போக்லே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement