இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பே இதுதான். இந்த தொடரை நடத்த மாட்டீங்களா? – ரவிசாஸ்திரி ஆதங்கம்

Shastri
- Advertisement -

இந்தியாவில் கடந்த பல வருடங்களாக நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை உலக அளவில் இன்று இந்திய கிரிக்கெட் அணி ஒரு அசைக்க முடியாத நாடாக இருப்பதற்கு மிக முக்கிய காரணமாகும். இன்று விளையாடப்படும் விஜய் ஹசாரே கோப்பை, சயீத் முஷ்டாக் அலி கோப்பை, ஐபிஎல் கோப்பையை காட்டிலும் மிகவும் பழமை வாய்ந்த இந்த ரஞ்சி கோப்பை பல தரமான வீரர்களை உருவாக்கி வளமான இந்திய கிரிக்கெட்டுக்கு வித்திட்ட ஒரு வரலாற்று சிறப்புமிக்க தொடராகும்.

- Advertisement -

அத்துடன் இந்தியாவுக்காக விளையாடும் பல நட்சத்திர வீரர்கள் தங்களின் பார்மை இழக்கும் போது இந்த தொடரில் விளையாடி மீண்டும் தங்களது பார்மை மீட்டெடுத்து விளையாடிய தருணங்கள் எத்தனையோ உள்ளது. குறிப்பாக முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் அதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

மதிப்பு இல்லை :
அப்படிபட்ட இந்த தொடரின் கடந்த 2020/21 சீசன் கரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது. ஆனால் அதே வருடம் பாதியில் ரத்து செய்யப்பட்ட ஐபிஎல் தொடரை துபாயில் நடத்திய பிசிசிஐ பல கோடி ரூபாய் வருமானங்களை ஈட்டியது. இருப்பினும் கடந்த வருடத்தின் ரஞ்சி கோப்பையை நடத்த பிசிசிஐ எந்த ஆர்வமும் காட்டவில்லை.

tn

அந்த வேளையில் ரஞ்சி கோப்பையின் 2021/22 சீசனை நடத்த திட்டமிட்ட பிசிசிஐ கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் இந்த தொடர் துவங்கும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் மீண்டும் கரோனா காரணமாக இந்த தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பின்னர் பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

கடும் எதிர்ப்பு :
மறுபுறம் ஐபிஎல் 2022 தொடரை நடத்த மெகா ஏலம் உட்பட பல்வேறு வகையான முயற்சிகளை எடுத்து வரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரஞ்சி கோப்பையை நடத்த எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் அமைதியாக இருந்தது. ஏற்கனவே கடந்த ஆண்டிற்கான ரஞ்சி கோப்பை ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த வருடமும் ரத்து செய்யப்பட்டால் இந்தியாவிலுள்ள பல ஆயிரக்கணக்கான கிரிக்கெட் வீரர்களின் வாழ்வு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது.

Karthik

இதனால் கடுப்பான ரசிகர்கள் ஐபிஎல் தொடர் போல ரஞ்சி கோப்பையிலும் கோடிக்கணக்கில் வருமானம் வந்தால் எப்படியாவது துபாயில் அந்த தொடரை பிசிசிஐ நடத்திவிடும் என சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்ய தொடங்கினார்கள். அத்துடன் ஐபிஎல் தொடருக்கு உள்ள மரியாதையை ரஞ்சி கோப்பைக்கு இல்லை என பல முன்னாள் வீரர்கள் சமூக வலைதளங்களில் கூறியிருந்தார்கள்.

- Advertisement -

விளாசிய ரவி சாஸ்திரி :
“ரஞ்சி கோப்பை என்பது இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பாகும். அதை நீங்கள் கைவிட நினைக்க ஆரம்பித்தால் அது நமது கிரிக்கெட்டை முதுகெலும்பற்றதாக மாற்றி விடும்” என சமீபத்தில் ஓய்வு பெற்ற இந்தியாவின் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் ஜாம்பவான் ரவிசாஸ்திரி தனது டுவிட்டரில் இன்று காலை கடுமையாக விமர்சித்திருந்தார். இப்படி பல விமர்சனங்களும் கேள்விகளும் எழுந்ததை அடுத்து வேறு வழி இல்லாத பிசிசிஐ ஒருவழியாக ரஞ்சிக் கோப்பையை நடத்த ஒப்புக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க : இவரை எதுக்கு டீம்ல சேத்தீங்க. டி20 ல சேன்ஸ் குடுத்தது கூட தப்புதான் – மதன்லால் விளாசல்

இதுகுறித்து வெளியான அறிவிப்பில் : “ரஞ்சி கோப்பையை 2 பகுதிகளாக நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. முதல் பகுதியில் தற்போதைக்கு லீக் சுற்றுப் போட்டிகளையும் வரும் ஜூன் மாதம் நாக் அவுட் சுற்று போட்டிகளையும் நடத்த உள்ளோம். இந்த தொடரை நடத்த தேவையான மருத்துவ பாதுகாப்பு அம்சங்கள் பற்றி எங்களின் குழு ஆராய்ந்து வருகிறது. ரஞ்சி கோப்பையானது நம் நாட்டின் மிகவும் கவுரவமான தொடராகும். இந்த தொடரில் இருந்து தான் இந்திய கிரிக்கெட்டுக்கு ஒவ்வொரு வருடமும் தரமான வீரர்கள் கிடைக்கிறார்கள்”என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement