இந்தியா மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஜிம்பாப்வே உலக சாம்பியனான இந்தியாவில் வீழ்த்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால் 2வது போட்டியில் அதற்கும் சேர்த்து அடித்த இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை தோற்கடித்தது.
அதனால் 1 – 1* (5) என்ற கணத்தில் தொடரை சமன் செய்துள்ள இந்தியா தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளது. முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய வீரர் துருவ் ஜுரேல் விக்கெட்டை ஜிம்பாப்வே வீரர் லுக் ஜாங்வே எடுத்தார். ஆனால் அப்போது தன்னுடைய காலில் போட்டிருந்த காலணியை கழற்றிய அவர் இந்த பையனின் விக்கெட்டை எடுத்து விட்டேன் என்று மொபைல் போனில் தெரிவிப்பது போல் பேசி கொண்டாடினார்.
கொண்டாட்டத்தின் விளக்கம்:
அது பல இந்திய ரசிகர்களை கடுப்பாக்கியது. ஏனெனில் அறிமுகப் போட்டியில் விளையாடிய அனுபவமற்ற வீரரான துருவ் ஜுரேல் விக்கெட்டை எடுத்த சீனியர் வீரரான அவர் இப்படி கொண்டாடலாமா? என்று இந்திய ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். சொல்லப்போனால் எப்படி வேண்டுமானாலும் கொண்டாடலாம் ஆனால் காலணியை வைத்து கொண்டாடிய அவர் துருவ் ஜுரேலை அவமானப்படுத்தியதாகவும் இந்திய ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் தாம் யாரையும் அவமானப்படுத்துவதற்காக அப்படி கொண்டாடவில்லை லுக் ஜாங்வே தெரிவித்துள்ளார். அத்துடன் ஒவ்வொரு முறையும் விக்கெட் எடுக்கும் போது தம்முடைய காதலியுடன் பேசுவது போல் கொண்டாட முடிவெடுத்துள்ளதாலயே அப்படி செய்ததாகவும் ஜாங்வே விளக்கத்தை கொடுத்துள்ளார். இது பற்றி ஸ்டாண்டர்ட் பத்திரிகையில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு.
“எனது காதலி ஜெஸி பிரெண்டாவுடன் பேசிய போது அப்படி கொண்டாடுவது பற்றி யோசித்தேன். அடுத்த நாள் எனது ஹோட்டல் அறையில் ஒரு விக்கெட் கிடைத்தால் நான் இப்படி கொண்டாடுவதைப் பற்றியும் அவரிடம் விவாதித்தேன். அதனாலேயே நான் ஷூ வைத்து அப்படி கொண்டாடுவதற்கு சென்றேன். ஒவ்வொரு முறையும் நான் விக்கெட்டை எடுக்கும் போது உன்னை அழைப்பேன் என்று அவளிடம் சொன்னேன்”
இதையும் படிங்க: பொறாமையில் பேசாதீங்க.. ஒலிம்பிக் ரைட்ஸ் வாங்குன அமெரிக்காவை கேளுங்க.. மைக்கேல் வாகனை விளாசிய கவாஸ்கர்
“அப்படி செய்வதால் ஒளிபரப்பு நேரம் தீர்ந்து விடாது என்று நம்புகிறேன்” எனக் கூறினார். அந்த வகையில் பல்வேறு பவுலர்கள் வித்தியாசமாக கொண்டாடும் நிலையில் ஜாங்வே தன்னுடைய காலணியை கழற்றி போனில் தம்முடைய காதலியிடம் பேசுவது போல் கொண்டாடுவதாக கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதகம் மூன்றாவது டி20 போட்டி ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது.



