IND vs NZ : என்னடா பிட்ச் இது? 100 ரன்னுக்கே இப்படி ஒரு போராட்டமா? – மைதானத்தின் தன்மை என்ன?

Hardik Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது இன்று லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள கடினப்பட்டு இறுதி வரை விளையாடி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் மட்டுமே குவித்தது.

IND-vs-NZ

- Advertisement -

இதன் காரணமாக 100 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது எளிதில் இந்த போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் எடுத்து பெரிய போராட்டத்திற்குப் பிறகு இந்த வெற்றியை பெற்றது என்று கூறலாம்.

குறிப்பாக எளிதாக வெற்றி பெற வேண்டிய இந்தப் போட்டியில் இந்திய அணியின் இவ்வளவு பெரிய போராட்டத்திற்கு காரணமாக லக்னோ மைதானத்தின் தன்மை இருந்தது என்றால் அது மிகையல்ல.

Hardik Pandya IND vs NZ

ஏனெனில் இந்தியாவில் இருக்கும் ஒரு சில ஆடுகளங்கள் முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். அந்த வகையில் இந்த லக்னோ மைதானம் முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் பேட்ஸ்மேன்களால் ரன் குவிக்க முடியாமல் போனது.

- Advertisement -

அதேபோன்று பவுண்டரி எல்லைகள் பெரியதாகவும், மைதானத்தில் அதிக அளவு ஸ்விங் இருந்ததாலும், பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்க தடுமாறினர். குறிப்பாக இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகள் விளையாடிய வீரர்களில் ஒருவர் கூட 30 ரன்கள் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IND vs NZ : இந்திய வீரராக டி20 கிரிக்கெட்டில் உச்சம் தொட்ட யுஸ்வேந்திர சாஹல் – புவியின் சாதனை முறியடிப்பு

அந்த அளவிற்கு இன்றைய போட்டிக்கான இந்த மைதானத்தின் தன்மை ரன்களை குவிக்க கடினமாக இருந்தது. அதிரடி ஆட்டக்காரர்கள் கூட இந்த மைதானத்தில் பவுண்டரி அடிக்க சிரமப்பட்டனர். அந்த அளவிற்கு மைதானம் 2 அணிகளுக்குமே சவாலை அளித்தததை இந்த போட்டியில் நாம் காண முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement