கே.எல் ராகுலை வெளியேற்றிய லக்னோ அணி.. அதுவும் என்ன காரணம் சொல்லி தெரியுமா? – இதெல்லாம் ஓவர்

KL-Rahul
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருவதால் ஒவ்வொரு ஆண்டும் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

லக்னோ அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட கே.எல் ராகுல் :

அந்த வகையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக அடுத்த ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த மெகா ஏலத்திற்கு முன்னதாக எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை தக்க வைக்கும்? என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள வேளையில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுலை அந்த அணி விடுவித்துள்ளது. கடந்த மூன்று சீசன்களாக கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் தற்போது அந்த அணியில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேற்றப்பட்டுள்ளார் என்ற முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணமாக அவர்களது தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பின்படி : கடந்த மூன்று ஆண்டுகளாகவே அவரது ஆட்டம் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் அவரது ஸ்ட்ரைக் ரேட் போட்டியின் மொமென்டத்தை பாதிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

மேலும் கே.எல் ராகுல் அதிக ரன்களை அடிக்கும் போட்டிகளில் நிறைய பந்துகளை வீணடிப்பதால் போட்டியின் நிலை மாறிவிடுகிறது என்றும் இம்பேக்ட் வீரர் இருந்தும் அவரது ஆட்டம் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை என்றும் கூறி அவர்கள் விடுவித்துள்ளனர்.

இதையும் படிங்க : கம்பீர் கண்ணை பாக்க முடியாம தலை குனிஞ்சு கைதட்ட வெச்சேன்.. சூர்யாகுமார் பற்றியும் சாம்சன் பேட்டி

இந்தியாவில் நடைபெற்று முடிந்த நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ஒரு ஆட்டத்தில் லக்னோ அணி தோல்வியை சந்தித்தபோது அதனை ஏற்றுக் கொள்ளாத உரிமையாளர் மைதானத்திலேயே கே.எல் ராகுலை திட்டியதும் அப்போது சர்ச்சையானது. அப்போதே கே.எல் ராகுல் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அந்த அணி நிர்வாகமே அவரை வெளியேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement