இரண்டே போட்டியுடன் 2025 ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறிய மாயங்க் யாதவ்.. காரணம் என்ன? – மாற்றுவீரர் அறிவிப்பு

Mayank Yadav
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி சார்பாக அறிமுகமான இளம் வேகப்பந்து வீச்சாளரான மாயங்க் யாதவ் 4 போட்டியில் மட்டுமே விளையாடியிருந்தாலும் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசி மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். அதன் காரணமாக அதே வருடம் இந்திய அணிக்காகவும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இருந்தார்.

2025 ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறிய மாயங்க் யாதவ் :

இந்தியாவில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசும் ஒரு பவுலர் கிடைப்பது கடினம் என்பதனால் இவர் மீது அனைவரது கவனமும் திரும்பியது. அதன் காரணமாக 2025 ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலத்திற்கு முன்னதாக லக்னோ அணியால் 11 கோடி ரூபாய் என்கிற மிகப்பெரிய தொகைக்கு அவர் தக்கவைக்கப்பட்டார்.

- Advertisement -

இருப்பினும் இந்த தொடருக்கு முன்னதாக ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் நடப்பு 2025 ஐபிஎல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. தேசிய கிரிக்கெட் அகாடெமியின் கண்காணிப்பில் பயிற்சியையும், சிகிச்சையையும் மேற்கொண்டு வந்த அவர் இந்த ஐபிஎல் தொடரின் இடையே லக்னோ அணிக்கு திரும்பியிருந்தார்.

அந்த வகையில் இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு எதிராக 2 போட்டிகளில் விளையாடியிருந்த அவர் 100 ரன்களை வாரி வழங்கியதோடு மட்டுமின்றி 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். கடந்த ஆண்டு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசிய அவர் தற்போது தனது பௌலிங் ஆக்ஷனை மாற்றியுள்ளதாலும், காயத்தினாலும் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வரையே பந்துவீசி இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் எஞ்சியுள்ள இந்த 2025 ஐபிஎல் தொடரிலிருந்து மீண்டும் தான் விலகுவதாக அறிவித்துள்ளார். ஏனெனில் அவருக்கு தற்போது மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக மாற்று வீரராக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வில்லியம் ரூர்கி லக்னோ அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : விராட் கோலி சொன்ன அந்த வார்த்தை தான் என்னை ஓகே சொல்ல வைத்தது.. கேப்டன் பதவி குறித்து – ரஜத் பட்டிதார் பேட்டி

இந்திய அணியின் அடுத்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக பார்க்கப்பட்ட மாயங்க் யாதவ் இப்படி இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை காயத்தை சந்தித்துள்ளது அவரது கிரிக்கெட் எதிர்காலத்தையே கேள்விக்குறி ஆக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement