பெரிய தொகை கொடுத்து ஏமாந்த லக்னோ அணி. அவரை நம்புவது வேஸ்ட் – விவரம் இதோ

LSG vs GT
Advertisement

இந்தியாவில் கடந்த மார்ச் 26 ஆம் தேதி துவங்கிய 15வது ஐபிஎல் தொடரானது தற்போது பிளேஆப் சுற்றினை நோக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் புதிதாக களமிறங்கிய லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக குஜராத் அணி 13 போட்டிகளில் 10 போட்டிகளில் வெற்றி பெற்று ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் லக்னோ அணி 13 போட்டிகளில் 8 வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது இடத்தில் ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ள நிலையில் உள்ளது.

LSG vs DC

இந்நிலையில் அந்த அணியில் பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஒரு சீனியர் வீரருடைய பார்ம் தற்போது கவலைக்குரிய ஒரு விடயமாக மாறியுள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 9.2 கோடிக்கு லக்னோ அணியால் மெகா ஏலத்திற்கு முன்னரே தக்கவைக்கப்பட்டார்.

- Advertisement -

ஆனால் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 147 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தி உள்ளதால் அவரது ஆட்டம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

Marcus Stoinis 23.jpeg

எப்பொழுதுமே பேட்டிங் செய்யும்போது அதிரடியாக விளையாடி பவுலர்களை நிலைகுலைய வைக்க கூடிய அவர் இந்த தொடரில் அவ்வாறு இல்லாமல் பவுலர்கள் அவரை எளிதாக எதிர்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் அவரது செயல்பாடு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

- Advertisement -

ஆனால் துவக்க வீரராக களமிறங்க வேண்டிய அவரை பின் வரிசையில் பயன்படுத்துவதால் தான் இந்த சரிவு ஏற்படுகிறது என்றும் மிடில் ஓவர்களலும், பினிஷராகவும் அவரை அவரை பயன்படுத்துவதால் இந்த சறுக்கல் ஏற்படுகிறது என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க : 1 ரன்னில் தவறிப்போன இரட்டைசதம் ! 145 வருட டெஸ்ட் வரலாற்றில் பரிதாபத்தை பெற்ற நட்சத்திர இலங்கை வீரர்

ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதன் காரணமாக அவரை லக்னோ அணியில் வாங்கியது தவறு என்று அனைவரும் கூறுவது குறிப்பிடத்தக்கது

Advertisement