SRH vs DC : எலிமினேட்டர் போட்டியை காண குறைந்த அளவிலேயே வந்த ரசிகர்கள் – விவரம் இதோ

ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் துவங்கியது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர்

SRH
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

williamson

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக குப்தில் 36 ரன்களும், மனிஷ் பாண்டே 30 ரன்களையும் குவித்தனர். டெல்லி அணி சார்பில் கீமோ பால் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 32 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 56 ரன்களும், பண்ட் 49 ரன்களையும் அடித்தனர். ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக தேர்வானார்.

Pant

வழக்கமாக எலிமினேட்டர் போட்டியைக்காண எந்த மைதானமாக இருந்தாலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அவ்வாறு ராசிகர்களின் கரகோஷங்கள் இருந்தால் போட்டி இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும். ஆனால், நேற்றைய எலிமினேட்டர் போட்டியை காண விசாகப்பட்டினம் மைதானத்தில் ரசிகர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. அரங்கம் நிறையும் என்று எதிர்பார்த்த நிலையில் கூட்டம் இல்லாதது போட்டியின் சுவாரசியத்தை குறைத்தது.

Warner

இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது சன் ரைசர்ஸ் அணியின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், பேர்ஸ்டோ ஆகியோர் உலகக்கோப்பை போட்டிக்காக நாடு திரும்பியதாலும், எலிமினேட்டர் போட்டி ஹைதராபாத் நகரில் இருந்து விசாகப்பட்டினம் மாற்றப்பட்டதாலும் ரசிகர்களின் கூட்டம் குறைவாக இருந்தது.

Advertisement