விராட் கோலி மாதிரி தவிப்பதற்கு முன்பே சரியான முடிவை எடுத்துவிட்டார் – பென் ஸ்டோக்ஸ் பற்றி முன்னாள் கேப்டனின் கருத்து

Stokes
- Advertisement -

இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் பணிச்சுமை காரணமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து 31 வயதிலேயே ஓய்வு பெற்றுள்ளது ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே அதிர்ச்சியாக அமைந்துள்ளது. கடந்த 2011இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி அடுத்த சில வருடங்களில் 3 வகையான அணியிலும் தனது மிகச் சிறப்பான செயல்பாடுகளால் முதன்மை வீரராக உருவெடுத்த அவர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் அபாரமாக செயல்பட்டு வெற்றி வீரராக அவதரித்தார். குறிப்பாக சொந்த மண்ணில் நடந்த 2019 ஐசிசி உலக கோப்பையில் அசத்திய அவர் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 84 ரன்கள் குவித்து முதல் முறையாக இங்கிலாந்து கோப்பையை முத்தமிட துருப்புச் சீட்டாக செயல்பட்டார்.

Stokes-1

- Advertisement -

அதனால் உலகின் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டர் என போற்றப்படும் அளவுக்கு உயர்ந்த அவர் சமீபத்தில் டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் சொந்த மண்ணில் டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை தோற்கடித்த இங்கிலாந்து இந்தியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்து அதிரடி வெற்றிகளை குவிக்கும் வலுவான அணியாக மாறியுள்ளது. அந்த நிலைமையில் இந்தியாவுக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் பங்கேற்ற அவர் 0, 21, 27 என சுமாராகவே செயல்பட்டார்.

வெளிப்படையான முடிவு:
அதன் காரணமாக நெருக்கமான கால அட்டவணைகளுக்கு மத்தியில் ஏற்கனவே 3 வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக விளையாடுவதற்கு தனது உடல் ஒத்துழைக்காததை கருத்தில் கொண்ட அவர் தன்மீது எதிர்பார்க்கப்படும் அளவுக்கு சிறப்பாக செயல்பட முடியவில்லை என்றும் உணர்ந்தார். அத்துடன் ஜோஸ் பட்லர் போன்ற இதர வீரர்களின் இடத்தைக் கெடுத்து ஒரு தரமான வீரர் உருவாவதை தடுக்கும் வகையில் அணியில் இருப்பதாக உணர்ந்த அவர் ஏற்கனவே 11 வருடங்கள் விளையாடி நிறைய நல்ல நினைவுகளை பெற்றுள்ளதால் அடுத்த தலைமுறைக்கு வழிவிடும் வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவதாக அறிவித்தார்.

Ben Stokes

இருப்பினும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் வழக்கம் போல 100% அர்ப்பணிப்புடன் விளையாடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். அவரின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியாக அமைந்தாலும் பணிச்சுமையை மனதுக்குள் வைத்து பூட்டாமல் அது தனது ஆட்டத்தை பாதிப்பதற்கு முன்பாகவே நாட்டின் நலனுக்காக இப்படி வெளிப்படையாக சுயநலமில்லாமல் ஓய்வு பெற்றுள்ளதால் அனைவரும் அவரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

- Advertisement -

விராட், வில்லியம்சன்:
இந்நிலையில் இதே பணிச்சுமை காரணமாக கடந்த ஜனவரியில் மொத்தமாக கேப்டன்சிப் பொறுப்புகளை ராஜினாமா செய்து சாதாரண வீரராக விளையாடும் போதிலும் முன்னேற்றத்தைக் காண முடியாமல் தவித்து வரும் விராட் கோலி மற்றும் அதே பணிச்சுமையால் சமீப காலங்களில் ரன்களை அடிக்க முடியாமல் திணறும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோர் சந்தித்துள்ள மோசமான நிலைமையை தாமும் சந்திக்கக் கூடாது என்பதற்காக பென் ஸ்டோக்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் உசேன் பாராட்டியுள்ளார். இது பற்றி தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக பென் ஸ்டோக்ஸ் கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு.

hussain

“களமிறங்கும் போதெல்லாம் பென் ஸ்டோக்ஸ் தன்னுடைய 100% பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்று நினைப்பார். 80% கிடையாது. அதனால் தான் அவர் சிறந்த வீரராக உள்ளார். சிலர் 80% அர்ப்பணிப்புடன் பென் ஸ்டோக்ஸ் விளையாடினால் போதும் என்று பரிந்துரைப்பார்கள். ஆனால் ஒரு வகையான கிரிக்கெட்டில் நீங்கள் 80% பங்களிப்பை காட்டினால் அது மற்றொரு வகையான கிரிக்கெட்டில் நிச்சயம் வீழ்ச்சியை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோருக்கு என்ன ஆயிற்று என்பதை பாருங்கள். பென் ஸ்டோக்ஸ் அவர்களைப் போன்ற நிலைமையை சந்திக்க விரும்பவில்லை”

“அவரின் இந்த முடிவு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு மத்தியில் கூச்சலை எழுப்பலாம். ஏனெனில் 31 வயது நிரம்பிய ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் இந்த குறிப்பிட்ட வகையான கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றிருக்க கூடாது” என்று கூறினார். அதாவது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் இருப்பவர்கள் பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெற்றதை விரும்பவில்லை என்று தெரிவிக்கும் நாசர் ஹூசைன் அதற்கு காரணம் அவர்கள் உருவாக்கிய தொடர்ச்சியான கால அட்டவணைகள் தான் என்று விமர்சித்துள்ளார்.

Stokes

மேலும் களத்தில் 100% பங்களிப்பை கொடுக்கத் தவறினால் விளையாடுவதை நிறுத்தி விடுவேன் என்ற வகையில் முடிவெடுத்துள்ள பென் ஸ்டோக்ஸ் உலகின் இதர வீரர்களைப் போல் அல்லாமல் தனித்துவ முடிவை எடுத்துள்ளதாகவும் பாராட்டினார்.

Advertisement