- Advertisement -
டிஎன்பிஎல்

டிஎன்பிஎல் 2024 : 36/5 என சரிந்த திருச்சி.. 4க்கு 4.. கட்டுக்கடங்காமல் அடிக்கும் நடப்பு சாம்பியன் கோவை

தமிழ்நாடு பிரிமியர் லீக் 2024 டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஜூலை 16ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள எஸ்என்ஆர் காலேஜ் கிரிக்கெட் மைதானத்தில் 15வது லீக் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் மற்றும் திருச்சி சோலாஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற கோவை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய திருச்சிக்கு வசீம் அகமது 17, அர்ஜுன் மூர்த்தி 3, சியாம் சுந்தர் 5, கேப்டன் ஆண்டனி தாஸ் 0, நிர்மல் குமார் 3, சரவணகுமார் 1 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 35/6 என ஆரம்பத்திலேயே திணறிய திருச்சி 100 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அப்போது சஞ்சய் யாதவ் மற்றும் ஜாபர் ஜமால் ஆகியோர் ஜோடி சேர்ந்து விளையாடினர்.

- Advertisement -

மிரட்டும் கோவை:
ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் விளையாடிய இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து திருச்சியை 100 ரன்கள் தாண்ட வைத்தது. அதில் சஞ்சய் யாதவ் 34 (27) ரன்களும் ஜாபர் ஜமால் 41* (18) ரன்களும் எடுத்தனர். ஆனால் அவர்களுடைய போராட்டத்தையும் தாண்டி 20 ஓவரில் திருச்சி 124/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய கோவை சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷாருக்கான் மற்றும் முகமது தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 125 ரன்களை துரத்திய கோவைக்கு சுரேஷ்குமாரை ஆரம்பத்திலேயே டக் அவுட்டாக்கிய அதிசயராஜ் டேவிட்சன் அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் சாய் சுதர்சனையும் 4 (2) ரன்னில் காலி செய்தார்.

- Advertisement -

அதனால் 7/2 என கோவை அணியும் ஆரம்பத்திலேயே தடுமாறியது. ஆனால் அப்போது வந்த முகிலேஷ் உடன் ஜோடி சேர்ந்த மற்றொரு துவக்க வீரர் சுஜய் நிதானமாக விளையாடினார். அந்த வகையில் நங்கூரமாகவும் தேவைப்படும் நேரங்களில் அதிரடியாகவும் விளையாடிய இந்த ஜோடி மேற்கொண்டு விக்கெட்டை விடாமல் கோவையை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தது.

அதில் சுஜய் 48* (39) ரன்களும் முகிலேஸ் அரை சதமடித்து 63* (54) ரன்களும் எடுத்து ஃபினிஷிங் செய்தனர். அதனால் 16.1 ஓவரிலேயே 125/2 ரன்கள் எடுத்த கோவை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய திருச்சிக்கு அதிசயராஜ் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இதையும் படிங்க: டிராவிட்டுக்கு வாழ்த்துக்கள்.. அடுத்ததா இந்திய அணி பாதுகாப்பான கைகளுக்கு போயிருக்கு.. பிரட் லீக் பாராடு

ஷாருக்கான் தலைமையில் இத்தொடரில் விளையாடும் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் 4 வெற்றிகள் பெற்றுள்ளது. அந்த வகையில் எதிரணிகளுக்கு கட்டுக்கடங்காமல் வெற்றி நடை போட்டு வரும் கோவை 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது.

- Advertisement -