டக் அவுட்டாகி வெளியேறிய சுப்மன் கில்.. தலை மீது கை வைத்து அவமானப்படுத்திய பவுலர் – என்ன நடந்தது தெரியுமா?

Gill-and-Williams
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியானது நேற்று செயின் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்ததோடு இந்த தொடரிலும் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

இந்நிலையில் இந்தப் போட்டியின் போது இந்திய அணியின் துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் அளிக்கப்படவில்லை. கடந்த ஆஸ்திரேலியா தொடரின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த அவரே யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவருக்கு பதிலாக சுப்மன் கில் களமிறங்கியது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியது.

- Advertisement -

ஆனாலும் தென்னாப்பிரிக்க நாட்டின் தட்பவெட்ப நிலை காரணமாக தற்போது ருதுராஜ் கெய்க்வாட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் அதன் காரணமாகவே சுப்மன் கில் களமிறங்கியதாக கூறப்பட்டது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும்போது இரண்டு பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையில் சுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.

ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அவர் சர்வதேச டி20 போட்டிகளில் சற்று தடுமாறி வருகிறார் என்றே கூறலாம். ஏனெனில் கடைசியாக அவர் விளையாடிய 6 சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருக்கிறார். மீதமுள்ள 5 போட்டிகளில் இரட்டை இலக்கத்தை தொடாமலேயே வெளியேறியிருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது அவர் டக் அவுட்டாகி வெளியேறியதும் தென்னாபிரிக்க வீரர் செய்த விக்கெட் செலிப்ரேஷன் தற்போது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும் அவர் ஏன் அப்படி தலை மீது கை வைத்து விக்கெட்டை கொண்டாடினார்? என்பது குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. அந்த வகையில் நேற்றைய போட்டியின் போது இரண்டாவது ஓவரை வீசிய லிஸாட் வில்லியம்ஸ் பந்துவீச்சில் கடைசி பந்தில் அவர் lbw மூலம் ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க : 13.5 ஓவர்களிலேயே 154 ரன்கள் அடிச்சி நாங்க ஜெயச்சதுக்கு காரணமே இவர்தான் – எய்டன் மார்க்ரம் பேட்டி

அப்படி சுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறிய வேளையில் தென் ஆப்பிரிக்கா வீரரான லிஸாட் வில்லியம்ஸ் அவரை கேலி செய்யும் விதமாக தலை மீது கிரீடத்தை வைப்பது போல ஆக்சன் செய்து அவரை கேலி செய்து வெளியேற்றினார். அதற்கு காரணம் யாதெனில் : இந்தியாவில் கோலியை கிங் என்று அழைப்பது போல சுப்மன் கில்லுக்கு “பிரின்ஸ்” அதாவது “இளவரசன்” என்ற பெயரும் உள்ளது. இந்நிலையில் இப்படி டக் அவுட்டாகி வெளியேறிய நீங்கள் தான் இளவரசரா? என்பது போன்று வில்லியம்ஸ் அவரை கேலி செய்து வெளியேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement