அப்பாடா என்ன சிக்ஸ்-ங்க இது. வானுயர பறந்து ரசிகர்கள் மத்தியில் விழுந்த பந்து – வைரல் வீடியோ

livingston
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் தற்போது பிக்பேஷ் லீக் தொடர் நடந்து வருகிறது. இதில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் பெர்த் ஸ்காட்ச்சர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் அடிலெய்டு அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிலிப்ஸ் சால்ட் அரை சதம் அடித்து அசத்தினார்.

- Advertisement -

59 ரன்கள் குவித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தவர் அந்த அணியின் ரன் குவிப்பு உதவினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 181 ரன்களை குவித்தது. அதன்பிறகு 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெர்த் அணி விளையாட தொடங்கியது. அந்த அணியின் துவக்க வீரர் லிவிங்ஸ்டன் மட்டும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அதில் 54 பந்துகளை சந்தித்த அவர் அதில் ஒரு பவுண்டரி மற்றும் 7 சிக்சர்கள் என 74 ரன்களை குவித்தார்.

இந்த ஏழு சிக்ஸர்களில் ஒரு சிக்சர் 106 மீட்டருக்கு பறந்தது. அபாரமான இந்த சிக்சர் ரசிகர்களின் மத்தியில் விழுந்து ரசிகர்களின் கவனத்தை இழுத்தது. அவர் அடித்த சிக்ஸர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் பெர்த் அணி படுதோல்வி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement