
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசி-சியின் மூலம் நடத்தப்படும் “மினி உலகக் கோப்பை” தொடரான சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த 1998-ஆம் ஆண்டு வங்கதேச மண்ணில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இதுவரை எட்டு முறை நடைபெற்றுள்ள இந்த தொடரானது ஒன்பதாவது முறையாக இந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஹைபிரிட் முறையில் நடைபெற இருக்கிறது. இந்த தொடர் நாளை துவங்க இருக்கும் வேளையில் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் எட்டு இடத்தை பிடித்திருக்கும் அணிகள் மட்டுமே பங்கேற்று விளையாட இருக்கும் இந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது மிக கௌரவம் வாய்ந்த தொடராக பார்க்கப்படும் வேளையில் கடந்து 2017-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற அந்த தொடரினை பாகிஸ்தான் அணி கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.
இந்நிலையில் 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19-ஆம் தேதி கராச்சி நகரில் துவங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்திய அணி பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தான் செல்லாததால் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் என்றும் ஒருவேளை இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் அந்த போட்டியும் துபாயில் நடைபெற இருக்கும் வகையில் அட்டவணை ஏற்கனவே வெளியாகி இருந்தது.
இந்த தொடரின் ஏ பிரிவில் : இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் இடம் பெற்றுள்ளன. அதே போன்று பி பிரிவில் : தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரினை எந்த சேனலில் பார்க்கலாம்? என்பது குறித்த ஒளிபரப்பு விவரம் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடர் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் வேளையில் இந்த தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் மூலம் பார்க்கலாம் என்றும் ஆன்லைன் மூலமாக பார்க்க விரும்புவோர் ஜியோ ஹாட்ஸ்டார் மூலமாகவும் பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இந்திய அணி கொஞ்சம் உஷாரா இருக்கனும்.. செமி பைனலுக்கு செல்லப்போகும் 4 டீம் இதுதான் – அஷ்வின் கணிப்பு
மேலும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரானது இதுவரை அயல்நாட்டு மண்ணிலேயே நடைபெற்ற வேளையில் முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் நடைபெற இருக்கிறது. இதன் மூலம் கடந்த 1996-ஆம் ஆண்டிற்கு பிறகு 29 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் ஐசிசி தொடர் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.