சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி மூலம் நடத்தப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது மினி உலக கோப்பை என்றும் அழைக்கப்படுவது வழக்கம். ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் எட்டு இடத்தை பிடிக்கும் அணிகள் மோதும் இந்த தொடரானது இதுவரை எட்டு முறை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த வேளையில் ஒன்பதாவது முறையாக இந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.
அரையிறுதிக்கு இந்த 4 அணிகள் தான் செல்லும் : ரவிச்சந்திரன் அஷ்வின்
எதிர்வரும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரானது நாளை பிப்ரவரி 19-ஆம் தேதி துவங்கி மார்ச் 9-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவிலும், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.
மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்று விளையாடயிருக்கும் இந்த தொடரில் இறுதிவரை சென்று கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு பலரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார்? என்பது குறித்த விவாதங்களும் சமூகவலைதளத்தில் அதிகளவு நிலவி வருகின்றன.
இந்நிலையில் இந்த தொடரின் அரையிறுதிக்கு செல்லும் நான்கு அணிகள் எது? இந்திய அணிக்கு இதில் என்ன பாதகம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணி தங்களது அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாட இருப்பதால் டாஸ் வெல்வது முக்கிய விடயமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஏனெனில் டாசை தோற்று முதலாவதாக பேட்டிங் செய்தால் இந்திய அணிக்கு அது பின்னடைவை ஏற்படுத்தும். ஏனெனில் துபாய் மைதானத்தில் பகலிரவு போட்டி நடைபெறும் போது முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு இரண்டாவதாக பந்துவீசும் போது கடினமாக இருக்கும். எனவே துபாய் ஆடுகளத்தை பொறுத்தவரை இந்திய அணி டாஸ் வெல்வது மிகவும் முக்கியம்.
இதையும் படிங்க : பும்ராவை விட கூடுதலாக ஷமிக்கு அந்த ப்ளஸ் இருக்கு.. நாம ஜெயிக்க அவர் முக்கியம் – லட்சுமிபதி பாலாஜி
என்னை பொருத்தவரை அரையிறுதிக்கு செல்லும் நான்கு அணிகளாக : இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியானது பிப்ரவரி 19-ஆம் தேதி நாளை பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.



