ஷாகிப் அல் ஹசனின் சாதனையை முறியடித்து வரலாறு படைக்க காத்திருக்கும் லிட்டன் தாஸ் – விவரம் இதோ

Litton Das
- Advertisement -

லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணியானது அபுதாபி நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் ஹாங்காங் அணியை எதிர்த்து விளையாடியது. அந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேச அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தி இந்த தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

ஷாகிப் அல் ஹசனின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் லிட்டன் தாஸ் :

இந்த போட்டியின் போது வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் பேட்டிங்கில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஏனெனில் அந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 39 பந்துகளில் 59 ரன்கள் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அவர் அடித்த இந்த 59 ரன்களையும் சேர்த்து இதுவரை வங்கதேச அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் 2496 ரன்களை குவித்து வங்கதேச அணி சார்பாக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

ஏற்கனவே அந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த முன்னாள் வீரரான முகமதுல்லாவை பின்னுக்கு தள்ளி அவர் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். வங்கதேச அணி சார்பாக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரராக முன்னாள் கேப்டன் சாகிப் அல் ஹசன் 2551 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

- Advertisement -

அவரது இந்த சாதனையை முறியடிக்க இன்னும் லிட்டன் தாஸிற்கு 56 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இதனை எளிதாக கடந்து லிட்டன் தாஸ் வரலாறு நிகழ்த்தயிருப்பது உறுதி. கடந்த 2015 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான லிட்டன் தாஸ் 111 போட்டிகளில் விளையாடி 15 அரை சதங்களுடன் 2496 ரன்கள் குவித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியை யாராலும் ஒன்னும் பண்ண முடியாது – அபிஷேக் நாயர் பாராட்டு

ஏற்கனவே ஷாகிப் அல் ஹசன் டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள வேளையில் தற்போது 30 வயதாகும் லிட்டன் தாஸ் அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement