கடந்த சில ஆண்டுகளாக மூத்த வீரர்களின் தலையீடு இன்றி இளம் வீரரான நஜ்முல் ஷாண்டோ தலைமையில் விளையாடி வந்த வங்கதேச கிரிக்கெட் அணியானது பெரிய அளவில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தாமல் மீண்டும் மோசமான நிலைக்கு சென்றது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை மற்றும் இந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி என அடுத்தடுத்த ஐசிசி தொடர்களில் பெரிய அளவில் அந்த அணி சறுக்கலை சந்தித்தது.
வங்கதேச டி20 அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு :
இந்த 2 ஐ.சி.சி தொடர்களிலும் பெரியளவில் எந்த ஒரு வெற்றியும் வராததால் மீண்டும் அந்த அணி சரிவு பாதையை நோக்கி சென்று வருகிறது. ஜிம்பாவே அணிக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய அந்த அணி ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்திருந்தது.
அதனை அடுத்து வங்கதேச அணியானது எதிர்வரும் மே 17ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்று விளையாட உள்ளது.
அதன்பிறகு பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச அணி அங்கு நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட இருக்கிறது. இப்படி அடுத்த அடுத்த டி20 தொடர்களில் வங்கதேச அணி விளையாட இருக்கும் வேளையில் அந்த அணியின் கேப்டன் நஜ்முல் ஷாண்டோ ஏற்கனவே டி20 போட்டிகளுக்கான அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
இதன் காரணமாக புதிய டி20 கேப்டனாக யார் அறிவிக்கப்படுவார்கள்? எப்படி வங்கதேச அணி செயல்படப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் இருந்து வந்தது. இந்நிலையில் மீண்டும் மூத்த வீரர்களுக்கு செல்லாமல் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான லிட்டன் தாஸை புதிய கேப்டனாக வங்கதேச அணியின் நிர்வாகம் நியமித்துள்ளது.
இதையும் படிங்க : அப்பாடா ஒரு வழியா 12 வருஷம் கழிச்சி ஜெயிச்சாச்சு.. ஷ்ரேயாஸ் ஐயரால் சாதித்த பஞ்சாப் அணி – விவரம் இதோ
அதோடு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அதாவது 2026 டி20 உலக கோப்பை வரை வங்கதேச அணியின் டி20 கேப்டனாக லிட்டன் தாஸ் தான் செயல்படுவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. 30 வயதான அனுபவ வீரரான லிட்டன் தாஸ் கடந்த 2015 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்காக அறிமுகமாகி இதுவரை 48 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 95 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.



