- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அது முடிஞ்ச கதை.. கூக்கபரா கிடையாது.. இந்தியாவை அந்த பந்தில் வீழ்த்துவது ரொம்ப கஷ்டம்.. லிட்டன் தாஸ்

வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது. அத்தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா வெல்லும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஏனெனில் 2012க்குப்பின் தங்களுடைய சொந்த மண்ணில் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது. ஆனால் கடந்த வாரம் பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் 2 – 0 (2) என்ற கணக்கில் வங்கதேசம் வீழ்த்தியது. அந்த தன்னம்பிக்கையுடன் இம்முறை இந்தியாவையும் தோற்கடிப்போம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ சவால் விடுத்திருந்தார்.

- Advertisement -

முடிந்த கதை:

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி முடிந்து போன கதை என்று வங்கதேசத்தின் நட்சத்திர வீரர் லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் வங்கதேசம் பெரும்பாலும் கூக்கபரா பந்துகளை பயன்படுத்தி விளையாடும் நிலையில் இந்தியாவில் எஸ்ஜி பந்துகள் பயன்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார். எனவே எஸ்ஜி பந்தில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வங்கதேசம் வீழ்த்துவது கடினம் என்றும் லிட்டன் தாஸ் ஒப்புக் கொண்டுள்ளார்.

இருப்பினும் முடிந்தளவுக்கு இந்தியாவை வீழ்த்த முயற்சிப்போம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் நன்றாக விளையாடினோம். ஆனால் அது ஏற்கனவே கடந்த காலமாகி விட்டது. அடுத்ததாக இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. என்னைப் பொறுத்த வரை பாகிஸ்தான் தொடர் முடிந்து விட்டது”

- Advertisement -

கடினமான எஸ்ஜி பந்துகள்:

“கண்டிப்பாக அதிலிருந்து எங்களுக்கு தன்னம்பிக்கை கிடைத்துள்ளது. இருப்பினும் இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் சிறந்த அணி. அதற்காக இந்திய தொடர் மிகவும் எளிதாக இருக்கும் அல்லது கடினமாக இருக்கும் என்று நான் சொல்ல மாட்டேன். அவர்கள் தங்களுடைய சொந்த சூழ்நிலைகளில் நல்ல அணி. ஐசிசி தரவரிசையிலும் இந்தியா உயரே இருக்கிறார்கள். எனவே அத்தொடர் எங்களுக்கு பெரிய சவாலாக இருக்கும்”

இதையும் படிங்க: துலீப் கோப்பையில் தேர்வான ரிங்கு சிங்.. சர்பராஸ் தவிர்த்து 9 வீரர்கள் கூண்டோடு மாற்றம்.. வெளியான அறிவிப்பு

“இந்தியா மிகவும் பெரிய அணி. அங்கே பயன்படுத்தப்படும் எஸ்ஜி பந்துகளில் நாங்கள் அரிதாகத்தான் விளையாடுவோம். கூக்கபரா பந்துகள் புதிதாக இருக்கும் போது கடினமாக இருந்தாலும் பழையதாகி விட்டால் எளிதாக அடிக்கலாம். ஆனால் எஸ்ஜி புதிதாக இருக்கும் போது எளிதாக அடிக்கலாம். பழையதாகும் போது அடிப்பது கடினம். எனவே அதை சமாளிக்க நாங்கள் கடினமாக உழைத்து வருகிறோம்” என்று கூறினார்.

- Advertisement -