துலீப் கோப்பையில் தேர்வான ரிங்கு சிங்.. சர்பராஸ் தவிர்த்து 9 வீரர்கள் கூண்டோடு மாற்றம்.. வெளியான அறிவிப்பு

RInku Singh
- Advertisement -

இந்தியாவில் 2024 துலீப் கோப்பை உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி துவங்கியது. அதில் முதல் ரவுண்ட் போட்டியில் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணி சுப்மன் கில் தலைமையிலான ஏ அணியை தோற்கடித்தது. அதே போல ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணியை ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சி அணி வீழ்த்தியது.

இந்த சூழ்நிலையில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடர் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது. அந்தத் தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

துலீப் கோப்பையில் ரிங்கு சிங்:

எனவே வங்கதேச தொடரில் இடம் பிடித்த இந்திய வீரர்கள் துலீப் கோப்பையிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செப்டம்பர் 12ஆம் தேதி வங்கதேச தொடருக்கு தயாராவதற்கான பயிற்சிகள் சென்னையில் துவங்க உள்ளது. அதில் பங்கேற்பதற்காக சுப்மன் கில், ஜெய்ஸ்வால், கே.எல் ராகுல், ரிஷப் பண்ட், துருவ் ஜுரேல், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப் ஆகியோர் துலீப் கோப்பையிலிருந்து வெளியேறுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதற்கு பதிலாக மாற்று வீரர்களையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன் படி இந்தியா ஏ அணியில் சுப்மன் கில், கேஎல் ராகுல், ஜுரேல், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப் ஆகியோருக்கு பதிலாக முறையே பிரதம் சிங், அக்சய் வட்கர், எஸ்கே ரசீத், சம்ஸ் முலானி, ஆகிப் கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் சுப்மன் கில்லுக்கு பதிலாக இந்தியா ஏ அணியின் கேப்டனாக மயங் அகர்வால் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

வங்கதேச தொடருக்காக:

அதே போல ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் ஆகியோருக்கு இந்தியா பி அணியில் பதிலாக பிரபுதேசாய் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் துலீப் கோப்பையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதில் ஆரம்பத்தில் கழற்றி விடப்பட்டிருந்த ரிங்கு சிங் யூபிடி20 தொடரில் அசத்தலாக விளையாடினார். அதனால் அவருக்கு துலீப் கோப்பையில் தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இதையும் படிங்க: அக்சர், ராகுல் இல்லை.. 2 இளம் அதிரடி வீரர்கள்.. வங்கதேச தொடருக்கான ப்ராட் ஹோக் இந்திய பிளேயிங் லெவன்

அதே போல இந்திய அணிக்காக முதல் முறையாக தேர்வாகியுள்ள யாஸ் தயாளுக்கு பதிலாக ஹிமான்சு மந்த்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அக்சர் படேலுக்கு பதிலாக நிசாந்த் சிந்து தேர்வாகியுள்ளார். ஆனால் வங்கதேச தொடரில் தேர்வாகியுள்ள சர்பராஸ் கான் மட்டும் துலீப் கோப்பையின் 2வது ரவுண்டில் விளையாடி விட்டு செப்டம்பர் 19ஆம் தேதி நேரடியாக இந்திய அணியில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement