இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள அத்தொடர் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது. அந்தத் தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா வெல்லும் என்று இங்குள்ள ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இருப்பினும் கடந்த வாரம் பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரில் வீழ்த்தி வங்கதேசம் வரலாறு படைத்தது. அந்த உத்வேகத்துடன் இந்தியாவையும் வீழ்த்துவோம் என்று வங்கதேச அணியினர் சவால் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெறும் இந்தத் தொடரில் தம்முடைய இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ப்ராட் ஹோக் தேர்ந்தெடுத்துள்ளார்.
இந்திய அணி:
அந்த அணியில் அனுபவமிக்க கேஎல் ராகுலை கழற்றி விட்டுள்ள அவர் சர்பராஸ் கானை தேர்ந்தெடுத்துள்ளார். அதே போல அக்சர் படேலுக்கு பதிலாக குல்தீப் யாதவை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். இது பற்றி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் ப்ராட் ஹோக் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் ரிஷப் பண்ட் நல்ல தேர்வு”
“மீண்டும் அவர் விளையாட தயாராக இருக்கிறார். இருப்பினும் அது துருவ் ஜுரேலுக்கு மோசமான செய்தியாக இருக்கும். 7வது இடத்தில் அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடிய ரிஷப் பண்ட் போன்ற மேட்ச் வின்னர் உங்களுக்கு தேவை. 40க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியை கொண்டுள்ள அவர் 70க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டுள்ளார்”
ப்ராட் ஹோக் லெவன்:
“இங்கிலாந்து வீரர் ஹரி ப்ரூக் மட்டுமே அவரைப் போல ஸ்ட்ரைக் ரேட்டையும் நல்ல சராசரியையும் கொண்ட ஒரே வீரராக இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிராக நல்ல துவக்கத்தைப் பெற்ற சர்பராஸ் கான் இந்த அணியில் பொருந்தக்கூடிய மற்றொரு வீரர். ரிஷப் பண்ட் போன்றவர் உங்களுக்கு போட்டியின் வேகத்தை தொடர உதவுவார். அவர் வேகமாக ரன்கள் குவிப்பது பவுலர்களுக்கு உதவும்”
இதையும் படிங்க: அவரும் தோனியும் தான் நான் விளையாடியதிலேயே சிறந்த கேப்டன்கள்.. ஓய்வு பெற்ற மொய்ன் அலி பேட்டி
“இதே இந்திய அணி ஆஸ்திரேலியாவிலும் நன்றாக விளையாடும். இத்தொடர் ஆஸ்திரேலிய தொடருக்கு நல்ல பயிற்சியாகவும் இருக்கும். எனது ஆரம்பக்கட்ட அணியில் ராகுல் அல்லது அக்சர் பட்டேல் இல்லை” என்று கூறினார். ப்ராட் ஹோக் இந்திய லெவன்: ரோஹித் சர்மா, யசஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின் குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா



