- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒரே இரட்டை சதத்தால் சச்சின், விராட், ரோஹித்தை மிஞ்சி – ஒருநாள் கிரிக்கெட்டில் சுப்மன் கில் படைத்த 7 சாதனைகளின் பட்டியல்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இந்தியா அடுத்ததாக சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி ஜனவரி 18ம் தேதியன்று ஹைதராபாத் நகரில் தொடங்கியது. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 349/8 ரன்கள் குவித்து மிரட்டியது. இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 34, விராட் கோலி 8, இசான் கிசான் 5, சூரியகுமார் யாதவ் 31, ஹர்திக் பாண்டியா 28 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.

ஆனால் தொடக்க வீரராக களமிறங்கி நங்கூரமாக நின்று நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் ஹாட்ரிக் சிக்ஸர்களுடன் இரட்டை சதம் அடித்து 19 பவுண்டரி 9 சிக்ஸருடன் 208 (149) ரன்கள் விளாசி அபார பினிஷிங் கொடுத்து கடைசி ஓவரில் அவுட்டானார். இப்போட்டியில் அவர் படைத்த அசத்த வைக்கும் சாதனைகளின் பட்டியல் இதோ:

- Advertisement -

1. இப்போட்டியில் 208 ரன்கள் குவித்த சுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்கள் குவித்த இந்திய கிரிக்கெட் வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்தார். அந்த பட்டியல்:
1. சுப்மன் கில் : 19 இன்னிங்ஸ்*
2. விராட் கோலி/ ஷிகர் தவான் : தலா 24 இன்னிங்ஸ்
3. நவ்ஜோட் சித்து/ஸ்ரேயாஸ் ஐயர் : 25 இன்னிங்ஸ்

2. அத்துடன் உலக அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 அடித்த 2வது வீரர் என்ற சாதனையை பாகிஸ்தானின் இமாம்-உல்-ஹாக் உடன் பகிர்ந்து கொண்டார். அந்த பட்டியல்:
1. பக்கார் ஜமான் : 18 இன்னிங்ஸ்
2. இமாம்-உல்-ஹக்/சுப்மன் கில் : தலா 19 இன்னிங்ஸ்

- Advertisement -

3. மேலும் 19 இன்னிங்ஸில் 1102 ரன்கள் குவித்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 19 இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பகார் ஜமான் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. சுப்மன் கில் : 1102
2. பக்காரர் ஜாமான் : 1089
3. இமாம்-உல்-ஹக் : 1011
4. விவியன் ரிச்சர்ட்ஸ் : 971

4. ஒருநாள் கிரிக்கெட்டில் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர் என்ற இசான் கிசான் சாதனை தகர்த்து புதிய உலக சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. சுப்மன் கில் : 23 வருடம் 132 நாட்கள்
2. இசான் கிசான் 24 வருடம் 145 நாட்கள்

- Advertisement -

5. மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் மிகவும் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர் என்று ரோகித் சர்மாவின் சாதனையும் தகர்த்தார். அந்த பட்டியல்:
1. சுப்மன் கில் : 23 வருடம் 132 நாட்கள், நியூசிலாந்துக்கு எதிராக, ஹைதெராபாத், 2023*
2. ரோகித் சர்மா : 26 வருடம் 186 நாட்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, பெங்களூரு, 2013

6. அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனை தகர்த்த அவர் புதிய வரலாறு படைத்தார். இதற்கு முன் கடந்த 2003ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக சச்சின் 186 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

7. அது போக இப்போட்டி நடைபெற்ற ஹைதராபாத் மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற சச்சின் சாதனையும் தகர்த்த அவர் புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் கடந்த 2009ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் 175 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும்.

2018 ஐசிசி அண்டர்-19 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் தொடர்நாயகன் விருது வென்று 2019இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சுப்மன் கில் ஆரம்பத்தில் சுமாரான செயல்பாடுகள் மற்றும் காயத்தால் வெளியேறினார். இடையே 2021இல் மறக்க முடியாத காபா வெற்றியில் 91 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய அவர் 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் அதிக ரன்கள் விளாசி முதல் வருடத்திலேயே கோப்பை வெல்லும் அளவுக்கு அசத்தியால் மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுத்தார்.

இதையும் படிங்க: IND vs NZ : இப்போவே சொல்லலாம். சுப்மன் கில்லோட இந்த சாதனையை முறியடிக்க ரொம்ப காலம் ஆகும் – விவரம் இதோ

அந்த வாய்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களில் தொடர் நாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றிய அவர் கடந்த மாதம் வங்கதேச மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்து நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் அடுத்தடுத்த சதங்களை அடித்துள்ளார். அப்படி 23 வயதிலேயே சதங்களையும் சாதனைகளையும் படைக்கத் துவங்கியுள்ள அவர் இந்திய கிரிக்கெட்டின் வருங்கால சூப்பர் ஸ்டாராக தன்னை நிரூபித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by