ஐபிஎல் வரலாற்றில் பாதியிலேயே கேப்டன் பதவியில் ராஜினாமா அல்லது நீக்கப்பட்ட வீரர்களின் மொத்த பட்டியல்

Morgan
- Advertisement -

கிரிக்கெட்டில் கேப்டன்ஷிப் என்பது ஒருவருக்கு இதர 10 வீரர்களையும் சரியான வகையில் வழிநடத்திய தாமும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றுத்தர வேண்டிய முக்கியமான கடினமான பொறுப்பாகும். அதுவும் ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட்டில் ஒவ்வொரு வருடமும் அணிக்குள் வரும் புதிய வீரர்களில் சரியானவர்களை கண்டறிந்து உடனடியாக தொடர்ச்சியாக வெற்றி பெற வேண்டும் இல்லையெனில் மிகப்பெரிய விமர்சனங்களைச் சந்திக்க வேண்டி வரும். அத்துடன் கேப்டன்ஷிப் அழுத்தம் என்பது சிறப்பாக விளையாடும் வீரர்களின் ஆட்டத்தையும் பாதிக்க வல்லது.

Ravindra Jaddeja MS Dhoni

- Advertisement -

அதை சமீபத்தில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரவீந்திர ஜடேஜா விஷயத்தில் தெளிவாக பார்ப்போம். கேப்டனாக இருப்பவர் சிறப்பாக செயல்படுவதுடன் அணிக்கும் வெற்றியைத் தேடித் தர வேண்டும். இதில் ஏதேனும் ஒன்று தவறினால் கூட ஒன்று தாமாக பதவி விலக நேரிடும். இல்லையேல் அணி நிர்வாகத்தால் பாதியிலேயே நீக்கப்படுவார்கள். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடர் நடந்து கொண்டிருக்கும்போது பாதியிலேயே கேப்டன் பதவியை இழந்தவர்களின் பட்டியல் பற்றி பார்ப்போம்.

1. விவிஎஸ் லக்ஷ்மன்: 2008 ஐபிஎல் தொடரில் பெரும்பாலான அணிகள் தங்களது மாநில சூப்பர் ஸ்டார்களை கேப்டனாக நியமித்த வகையில் அப்போதைய டெக்கான் சார்ஜஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டார்.

Laxman

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தரமானவராக கருதப்படும் அவர் தலைமையில் 14 போட்டிகளில் 12 தோல்விகளை அந்த அணி பெற்றதால் கடுப்பான அந்த அணி நிர்வாகம் அந்த வருட இறுதியில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட்டை கேப்டனாக நியமித்தது. அதை தொடர்ந்து அடுத்த வருடமே 2009இல் கில்கிறிஸ்ட் தலைமையில் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

2. கெவின் பீட்டர்சன்: 2009 ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய தொகைக்கு இங்கிலாந்தின் பீட்டர்சனை வாங்கி கேப்டனாக பெங்களூரு நியமித்தது. ஆனால் அவர் தலைமையில் முதல் 5 போட்டிகளில் 4 தோல்விகளை பெற்றது.

pietersen

அதனால் ஏமாற்றமடைந்த அப்போதைய உரிமையாளர் விஜய் மல்லையா உடனடியாக ஜாம்பவான் அனில் கும்ப்ளேவை அடுத்த கேப்டனாக நியமித்த நிலையில் அவர் தலைமை சக்கை போடு போட்ட பெங்களூரு இறுதிப்போட்டி வரை சென்று அசத்தியது.

- Advertisement -

3. விராட் கோலி: 2011 ஐபிஎல் தொடரில் பெங்களூருவை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற கேப்டன் டேனியல் வெட்டோரி தலைமையில் 2012இல் முதல் 5 போட்டிகளில் பங்கேற்ற அந்த அணி 3 தோல்விகளை பெற்றதால் உடனடியாக பாதியிலேயே இளம் வீரராக இருந்த விராட் கோலி அடுத்த கேப்டனாக நியமிக்க பட்ட்டார்.

Virat Kohli 99

அதைத் தொடர்ந்து அந்த வருடம் 5-வது இடத்தைப் பிடித்த பெங்களூருவை 2016 தொடரில் பைனல் வரை அழைத்துச் சென்ற விராட் கோலி கடந்த வருடம் ராஜினாமா செய்தார்.

- Advertisement -

4. குமார் சங்ககாரா: 2012 ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஜாம்பவான் குமார் சங்கக்காரா தலைமையில் வரிசையாக 5 தொடர் தோல்விகளை அந்த அணி சந்தித்தது. அதனால் பாதியிலேயே அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் ஒயிட் கேப்டனாக நியமிக்கப்பட்ட போதிலும் அந்த அணியால் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை.

Ponting

5. ரிக்கி பாண்டிங்: 2 உலக கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலியாவின் மகத்தான ரிக்கி பாண்டிங் தலைமையில் 2013இல் மும்பை இந்தியன்ஸ் முதல் 5 போட்டிகளில் 4 தோல்விகளை சந்தித்த காரணத்தால் பாதியிலேயே ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன்பின் விஸ்வரூபம் எடுத்து அந்த அணி சாம்பியன் பட்டம் வென்று இதுவரை 5 கோப்பைகளை வென்றுள்ளது.

6. அஞ்சேலோ மேத்தீயூஸ்: தோல்வி அடைவதற்காகவே தோற்றுவிக்கப்பட்ட புனே வாரியர்ஸ் அணியை 2013இல் இலங்கையின் அஞ்சலோ மெத்தியூஸ் கேப்டனாக வழிநடத்தினார். அதில் முதல் 5 போட்டிகளில் 4 தோல்விகளை பெற்றதால் அதிரடியாக நீக்கப்பட்ட அவருக்கு பதில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருப்பினும் கூட அந்த அணி இறுதியில் 8-வது இடத்தையே பிடித்தது.

dhawan1

7. ஷிகர் தவான்: 2014 ஐபிஎல் தொடரில் புதிதாக உருவாக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் தலைமையில் முதல் 4 போட்டிகளில் 2 தோல்விகளை பெற்றதுடன் பேட்டிங்கில் அவர் தடுமாறியதால் தாமாகவே பதவி விலகினார்.

அதைத்தொடர்ந்து டி20 உலகக் கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சம்மி கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்றாலும் அந்த அணியால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லமுடியவில்லை.

watson

8. ஷேன் வாட்சன்: 2015 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானை ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் வழிநடத்தி முதல் 10 போட்டிகளில் 6 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார். இருப்பினும் கேப்டன்ஷிப் தமது ஆட்டத்தை பாதித்ததாக உணர்ந்ததால் பாதியிலேயே ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட இறுதியில் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

9. டேவிட் மில்லர்: 2016 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியை அனுபவமே இல்லாத டேவிட் மில்லர் கேப்டன்ஷிப் செய்ததால் பேட்டிங்கில் முதல் 6 இன்னிங்ஸ்சில் வெறும் 76 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அவர் தலைமையில் பஞ்சாப்பும் தொடர் தோல்விகளைச் சந்தித்தது.

miller

அதன் காரணமாக அந்த சீசனில் ரன்களை அடித்து நல்ல பார்மில் இருந்த தமிழக வீரர் முரளி விஜய் பாதியிலேயே கேப்டனாக நியமிக்கப்பட்ட போதிலும் அந்த அணி கடைசி இடம்தான் பிடித்தது.

10. கெளதம் கம்பீர்: 2017 வரை கொல்கத்தாவுக்கு கேப்டனாக இருந்து 2 கோப்பைகளை வென்று கொடுத்த கௌதம் கம்பீர் தனது கேரியரை சொந்த மாநிலமான டெல்லியில் முடிக்க வேண்டும் என நினைத்து 2018இல் டெல்லி அணிக்காக அந்த அணி நிர்வாகத்தின் உதவியுடன் கேப்டனாக செயல்பட்டார்.

gambhir-karthik

ஆனால் எதிர்பாராத வகையில் அவர் தலைமையில் முதல் 6 போட்டிகளில் 1 வெற்றி மட்டுமே டெல்லி பெற்றதால் தாமாகவே அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

11. அஜிங்கிய ராகனே: 2018 ஐபிஎல் தொடரில் ரஹானே தலைமையில் 8 போட்டிகளில் 6 முறை ராஜஸ்தான் தோல்வி அடைந்ததால் தாமாகவே அவர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். அதனால் பந்தை சேதப்படுத்திய வழக்கில் தடை பெற்றிருந்த ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்ற போதிலும் அந்த அணி இறுதியில் 7-வது இடத்தையே பிடித்தது.

rahane

12. தினேஷ் கார்த்திக்: 2018 முதல் கொல்கத்தாவை வழி நடத்திய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தலைமையில் 2020இல் 7 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்த போதிலும் அவர் ரன்கள் எடுக்க தடுமாறிய காரணத்தாலும் 2019 உலக கோப்பையை இங்கிலாந்துக்கு வென்று கொடுத்த இயன் மோர்கன் கேப்டனாக வரவேண்டும் என்ற பேச்சு இருந்ததாலும் தாமாகவே பாதியிலேயே பதவி விலகிய நிலையில் இறுதியில் அந்த அணி 5-வது இடத்தை மட்டுமே பிடித்தது.

13. டேவிட் வார்னர்: இதை பற்றி ரசிகர்கள் யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்றாலும் மலைபோல ரன்கள், 2016இல் கேப்டனாக ஐபிஎல் கோப்பை என அனைத்தையும் பெற்றுக் கொடுத்ததார்.

Warner

ஆனாலும் வெறும் ஒரு வருடம் ரன்கள் அடிக்கவில்லை என்ற காரணத்தால் 2021இல் டேவிட் வார்னரை ஹைதராபாத் அணி நிர்வாகம் பாதியிலேயே நீக்கி கேன் வில்லியம்சனை கேப்டனாக நியமித்தது. அதிலும் கூல்டிரிங்ஸ் தூக்க வைத்து அவரை அவமானப்படுத்தி அந்த அணி நிர்வாகம் கடைசியில் கழற்றி விட்டது ரசிகர்களால் என்றும் மறக்க முடியாது.

Advertisement