பெரிய இடத்து மாப்பிளை கேஎல் ராகுல் திருமணத்துக்கு தோனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் கொடுத்த பரிசுகள் – லிஸ்ட் இதோ

KL-Rahul-and-Dhoni
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் திருமணம் கடந்த ஜனவரி 23ஆம் தேதியன்று கோலாகலமாக நடைபெற்றது. பிரபல பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டி அவர்களின் மகளான அதியா செட்டியும் அவரும் சமீப காலங்களாகவே காதலித்து வந்தனர். ஆரம்பத்தில் கிசுகிசுக்களாக வெளிவந்த அந்த செய்திகளை நாளடைவில் உறுதி செய்த அவர்கள் பெற்றோர்களின் சம்மதத்தை வாங்கி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். அதற்கு முன்பாகவே இரு வீட்டார் சம்பந்தத்துடன் நிச்சயம் செய்து கொண்ட அவர்களது திருமணம் இடையே லாக் டவுன் வந்ததால் தள்ளிப்போனது. அந்த நிலையில் மேற்கொண்டு தள்ளிப் போவதை விரும்பாத அவர்கள் கடந்த ஜனவரி 23ஆம் தேதியன்று இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள்.

பெங்களூருவை சேர்ந்த கேஎல் ராகுல் கிரிக்கெட்டில் லக்னோ அணியின் கேப்டனாகவும் இந்தியாவின் வருங்கால கேப்டனாகவும் உருவெடுக்கும் அளவுக்கு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிலையான இடத்தை பிடித்துள்ளார். அந்த வகையில் தமக்கென்று தனி அடையாளத்தையும் நட்சத்திர அந்தஸ்தையும் உருவாக்கியுள்ள அவருக்கு நிறைய ரசிகர்களும் உள்ளனர். அதே போல் அதியா செட்டியும் பாலிவுட் திரைத்துறையில் நடித்து பிரபலமடைந்தவர். அப்படி 2 நட்சத்திரங்கள் திருமணம் செய்து கொண்ட நிலையில் எதிர்பார்க்கப்பட்டது போலவே அவர்களுக்கு நெருங்கிய நட்சத்திரங்கள் விலையுயர்ந்த பொருட்களை திருமண பரிசாக கொடுத்துள்ளார்கள். ரசிகர்கள் வியக்கும் விலை கொண்ட அந்த பரிசு பொருட்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. ஜாக்கி செராப்: மூத்த பாலிவுட் நடிகரான ஜாக்கி செராஃப் 30 லட்சம் மதிப்புள்ள “சோப்பார்ட்” கடிகாரத்தை பெரிய இடத்து மாப்பிள்ளையாக உருவாக்கியுள்ள ராகுலுக்கு திருமண பரிசாக கொடுத்துள்ளார்.

2. எம்எஸ் தோனி: இந்தியாவின் மகத்தான கேப்டனாக கருதப்படும் எம்எஸ் தோனி 80 லட்சம் மதிப்புள்ள “கவாஸகி நிஞ்ஜா” இருசக்கர வாகனத்தை பரிசாக கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ராகுல் தனது ஆரம்பகட்ட கேரியரை தோனி தலைமையிலான இந்திய அணியில் விளையாடினர்.

- Advertisement -

3. அர்ஜுன் கபூர்: அதே போல் மற்றொரு பிரபல பாலிவுட் நடிகராக இருக்கும் அர்ஜுன் கபூர் 1.50 கோடி வைர பிரேஸ்லெட் ஒன்றை மாப்பிள்ளை ராகுலுக்கு பரிசளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

4. சல்மான் கான்: அத்துடன் பாலிவுட் திரைப்பட துறையின் உச்சக்கட்ட நடிகர்களில் முதன்மையானவராக ஜொலித்து வரும் சல்மான் கான் அவர்கள் 1.64 கோடி ரூபாய் ஆடி சொகுசு காரை ராகுல் – அதியா செட்டி தம்பதிகளுக்கு பரிசாக கொடுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

5. விராட் கோலி: இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி 2.17 கோடி ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை புதிய மாப்பிள்ளை ராகுலுக்கு பரிசாக கொடுத்துள்ளார். இந்தியாவுக்கு முன்பாகவே ஐபிஎல் தொடரில் விராட் கோலியுடனும் அவரது தலைமையிலான பெங்களூரு அணியில் விளையாடி தான் ராகுல் முதல் முறையாக அனைவரது கவனத்தை ஈர்த்தார்.

மேலும் தோனி தலைமையில் அறிமுகமானாலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் தான் பெரும்பாலான வாய்ப்புகளை பெற்ற ராகுல் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிரந்தரமான இடத்தை பிடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். அந்த வகையில் நல்ல நண்பராக இருக்கும் ராகுலுக்கு இந்த பெரிய பரிசை விராட் கோலி கொடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

- Advertisement -

6. மாப்பிளை சீதனம்: இறுதியாக பாலிவுட் நடிகர் சுனில் செட்டி அவர்கள் தன்னுடைய மகளுக்காக தாய் வீட்டு சீதனம் போல 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு ஆடம்பர பங்களாவை தனது புதிய மாப்பிள்ளை ராகுலுக்கு பரிசாக கொடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: IND vs NZ : இறக்கமில்லாமல் அடித்து நியூசிலாந்து அணியை கதறவிட்ட இந்திய வீரர்கள் – இமாலய இலக்கு நிர்ணயிப்பு

தனது வாழ்க்கையில் எத்தனை சொத்துக்கள் இருந்தாலும் மிகப் பெரிய சொத்தாக விளங்கும் மகள் திருமணத்திற்கு பின் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்காக இந்த மிகப்பெரிய பரிசை அவர் கொடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்திகள் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்றாலும் மிகுந்த நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement