சாம்பியனான குஜராத்துக்கு பரிசு எத்தனை கோடி தெரியுமா ! ஐபிஎல் 2022 தொடரின் மொத்த பரிசு தொகை பட்டியல் இதோ

Gujarat Titans GT Champ
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்ற மாபெரும் இறுதிப்போட்டி மே 29-ஆம் தேதியான நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இரவு 8 மணிக்கு நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் தைரியமாக பந்து வீசுவதாக அறிவித்தாலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தானின் தரமான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 130/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 22 (16) கேப்டன் சஞ்சு சாம்சன் 14 (11) தேவ்தூத் படிக்கல் 2 (10) என முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறிய நிலையில் காப்பாற்றுவார் என கருதப்பட்ட ஜோஸ் பட்லர் 5 பவுண்டரியுடன் 39 (35) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

GT vs RR Shubman Gill

- Advertisement -

மேலும் சிம்ரோன் ஹெட்மயர் 11 (12) ரியன் பராக் 6 (9) போன்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஏமாற்றினர். பந்துவீச்சில் அந்த அளவுக்கு மிரட்டிய குஜராத் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 131 என்ற சுலபமான இலக்கை துரத்திய குஜராத்துக்கு ரித்திமான சஹா 5 (7) மேத்தியூ வேட் 8 (10) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் 3-வதாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 3 பவுண்டரி 1 சிக்சருடன் 34 (30) ரன்கள் எடுத்து வெற்றி உறுதி செய்த அவுட்டானார்.

அவருடன் நங்கூரமாக நின்ற மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 45* (43) ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 32* (19) ரன்கள் எடுத்த டேவிட் மில்லர் மிரட்டல் பினிஷிங் கொடுத்ததால் 18.1 ஓவரிலேயே 133/3 ரன்கள் எடுத்த குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் தனது முதல் வருடத்திலேயே அதுவும் சொந்த மண்ணில் ஒரு லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் ஐபிஎல் 2022 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் சரித்திரம் படைத்தது.

இந்த வெற்றிக்கு 34 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள் எடுத்த ஆல்ரவுண்டராகவும் கேப்டனாகவும் அசத்திய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மறுபுறம் இந்த பிரம்மாண்ட போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கில் சொதப்பிய ராஜஸ்தான் 2008 க்குப் பின் 2-வது கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை நழுவ விட்டது.

- Advertisement -

பரிசு தொகை:
சரி இந்த தொடரில் அசத்தியவர்களுக்கு இறுதி போட்டியில் கொடுக்கப்பட்ட பரிசுத்தொகைகளைப் பற்றி பார்ப்போம்:

Pandya

1. சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வெற்றிக் கோப்பையுடன் முதல் பரிசாக 20 கோடி பரிசளிக்கப்பட்டது.

- Advertisement -

2. லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்தி இறுதிப்போட்டியில் வெற்றிக்காக போராடி 2-வது இடத்தை பிடித்த ராஜஸ்தான் 12.5 கோடி ஆறுதல் பரிசு வென்றது.

Shane Warne RR

3. அதேபோல் நாக்-அவுட் வரை வந்து குவாலிபயர் 2 போட்டியில் தோற்ற பெங்களூரு 7 கோடியையும் எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்த லக்னோ 6.5 கோடிகளை வென்றன.

- Advertisement -

4. 863 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்ற ஜோஸ் பட்லர் 10 லட்சம் பரிசை வென்றார்.

Jos Buttler Orange Cap

5. 45 சிக்சர்களை பறக்கவிட்டு அதிக ரசிகர்கள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்த ஜோஸ் பட்லர் 10 லட்சம் பரிசை வென்றார்.

6. இந்த வருடத்தின் பெரும்பாலான போட்டிகளில் கேம் சேஞ்சராக செயல்பட்ட ஜோஸ் பட்லர் மீண்டும் 10 லட்சம் பரிசைப் பெற்றார்.

Jos Buttler vs RCB

7. அதிக பவுண்டரிகள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்த ஜோஸ் பட்லர் அதற்காக மீண்டும் 10 லட்சம் பரிசை வென்றார்.

8. அத்துடன் ரன் மழை பொழிந்து ஆரஞ்சு தொப்பியை வென்ற ஜோஸ் பட்லர் மீண்டும் அதற்காக பரிசாக 10 லட்சம் வென்றார்.

Jos Buttler 89

9. அதேபோல் பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்த ஜோஸ் பட்லர் மீண்டும் 10 லட்சம் பரிசை வென்றார்.

10. 27 விக்கெட்டுக்களுடன் அதிக விக்கெட்டுகள் எடுத்து ஊதா தொப்பியை வென்ற யுஸ்வென்ற சஹாலுக்கு 10 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது.

Yuzvendra Chahal Purple Cap

11. இந்த வருடம் முழுவதும் அதிரடியாக அதிக ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை விளாசிய தினேஷ் கார்த்திக் சூப்பர் ஸ்ட்ரைக்கர் என்ற விருதை வென்று 10 லட்சத்தை அள்ளினார்.

12. இந்த வருடம் முழுவதும் அசுர வேக பந்துகளால் எதிரணிகளை திணறடித்து அசத்திய 22 வயது இளம் வீரர் உம்ரான் மாலிக் வளர்ந்து வரும் வீரர் என்ற விருதை வென்று 10 லட்சத்தை அள்ளினார்.

Evin Lewis Rinku SIngh Catch

13. கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ரின்கு சிங் கேட்ச்சை பிடித்து லக்னோவை வெற்றி பெற வைத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லெவிஸ் அதற்காக 10 லட்சத்தை வென்றார்.

14. அதேபோல் இந்த வருடத்தில் அதிவேகமான பந்தை வீசிய பவுலராக சாதனை படைத்த குஜராத்தின் லாக்கி பெர்குசன் (157.3) அதற்காக 10 லட்சம் பரிசை அள்ளினார்.

RRvsGT

15. மேலும் போட்டியில் அற நெறியுடன் விளையாடியதற்காக குஜராத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 2 அணிகளின் ஃபேர் பிளே விருதை வென்றதால் 10 லட்சத்தை பகிர்ந்து கொண்டன.

Advertisement