ஐ.பி.எல் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தவர்களின் முழுவிவரம் – லிஸ்ட் இதோ

Mishra
- Advertisement -

ஐ.பி.எல் தொடரில் இதுவரை பல்வேறு பந்துவீச்சாளர்கள் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள். அந்த ஹாட்ரிக் விக்கெட்கள் குறித்த சுவாரசிய தகவல்களை இந்த பதிவில் காண்போம். குறிப்பாக முதலில் ஹாட்ரிக் வீழ்த்திய வீரர் மற்றும் அதிகமுறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் குறித்தும் இந்த பதிவில் தகவல்களை கொடுத்துள்ளோம்.

Balaji

- Advertisement -

ஐபிஎல் தொடரின் முதல் ஹாட்ரிக் :

ஐபிஎல் தொடரின் முதல் ஹாட்ரிக் விக்கெட் லட்சுமிபதி பாலாஜி வீழ்த்தினார். பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சென்னை மைதானத்தில் ஆடியபோது இர்பான் பதான் பியூஸ் சாவ்லா மற்றும் விஆர்வீ சிங்கு ஆகிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Mishra

ஐபிஎல் தொடரின் அதிக ஹாட்ரிக் :

- Advertisement -

ஐபிஎல் தொடரில் அமித் மிஸ்ரா சாதனையை செய்திருக்கிறார். இவர் இதுவரை மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

preityuvi

யுவராஜ் சிங் :

- Advertisement -

ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக வலம் வந்தவர் இவர். யுவராஜ் சிங் மொத்தம் இவர் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். பஞ்சாப் அணிக்காக விளையாடிய போது முதன் முதலாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக ராபின் உத்தப்பா, ஜாக் காலிஸ், மார்க் பவுச்சர் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் இரண்டாவதாக டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக எடுத்திருந்தார்.

Rohith

ரோகித் சர்மாவின் ஹாட்ரிக் :

ரோஹித் சர்மா சிறந்த பேட்ஸ்மேன் ஆனால் அவர் ஒரு மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்பது எத்தனை பேருக்கு தெரியும். 2009ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அபிஷேக் நாயர், ஹர்பஜன் சிங் மற்றும் ஜேபி டுமினி ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகள் வீழ்த்தி 6 ரன்கள் மட்டுமே அந்த போட்டியில் விட்டுக் கொடுத்திருந்தார்.

Advertisement