அமர்க்கள ஆரம்பம் அதன்பின் சொதப்பல்! ஐபிஎல் 2022 தொடரில் நல்ல தொடக்கம் பெற்று சொதப்பிய 5 வீரர்கள்

Ayush Badoni 360
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் கடந்த ஒரு மாதமாக மும்பை நகரில் பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்றுவரும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று விறுவிறுப்பான கட்டத்தை எட்டி அனல் பறந்து வருகிறது. ஏனெனில் முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக மும்பை மற்றும் சென்னை ஆகிய தொடர் தோல்விகளை சந்தித்த 2 வெற்றிகரமான அணிகளை தவிர எஞ்சிய 8 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதேபோல் இந்த தொடரில் நிறைய இளம் வீரர்கள் தங்களது அபார திறமையை வெளிப்படுத்தி தங்களது நாட்டுக்கு விளையாடுவதற்காக போட்டி போட்டுக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

IPL 2022

- Advertisement -

அந்த வகையில் இந்த வருடம் ஐபிஎல் தொடர் துவங்கியதும் ஒருசில வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் பாராட்டுக்களையும் பெற்றனர். ஆனால் பாராட்டு மழையில் நனைந்த அவர்கள் 2 – 3 போட்டிகளுக்கு பின் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டதை விட அதிகமாக சொதப்பினர். அதை பற்றி பார்ப்போம்:

1. இஷான் கிசான்: கடந்த சில வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட தொடங்கி பட்டைய கிளப்பும் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம் வீரர் இஷான் கிசான் அதன் காரணமாகவே இந்தியாவிற்கு விளையாடும் அளவுக்கு உயர்ந்தார். அதனால் அவரின் மவுசு எகிறிய நிலையில் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதால் சமீபத்தில் நடந்த ஏலத்தில் அவரை மீண்டும் எப்படியாவது வாங்க வேண்டும் என்று கங்கணம் கட்டிய மும்பை அணி நிர்வாகம் 15.25 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு வாங்கி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

MI vs RR Ishan Kishan

அப்போதிலிருந்தே அவர் மீது அனைவரின் மொத்த பார்வையும் திரும்பிய நிலையில் அதற்காகவே எப்படியாவது சிறப்பாக விளையாடி தீரவேண்டும் என்ற சுமையும் அவரின் தலையில் விழுந்தது. அந்த நிலையில் முதல் போட்டியில் அற்புதமாக 81* (48) ரன்கள் விளாசிய அவர் 2-வது போட்டியிலும் 54 (43) ரன்களும் விளாசி நம்பிக்கைக்கு பாத்திரமாய் செயல்பட்டார். ஆனால் அதன்பின் பெரும்பாலும் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடிய அவர் பார்மை இழந்து மும்பைக்கு பாரமாகி விட்டார். அதைவிட அவரை மட்டும் வாங்கியதற்காக பெரிய தொகையை வாரி இறைத்த மும்பை மேலும் ஒருசில தரமான வீரர்களை வாங்க முடியாமல் ஏலத்தில் சொதப்பி தற்போது லீக் சுற்றுடன் முதல் அணியாக வெளியேறிவிட்டது.

- Advertisement -

2. ஆயுஷ் படோனி: லக்னோவுக்காக இந்த வருடம் முதல் போட்டியிலேயே அறிமுகமாக களமிறங்கி இக்கட்டான சூழ்நிலையில் 54* (41) ரன்கள் விளாசிய இளம் வீரர் ஆயுஷ் படோனி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அடுத்த ஒருசில போட்டிகளிலும் கடைசி நேரத்தில் மைதானத்தின் நாலா புறங்களிலும் அடித்து பினிஷிங் செய்த காரணத்தால் “எங்களின் ஏபிடி” என்று லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் புகழும் அளவுக்கு உயர்ந்தார்.

Ayush Badoni 2

ஆனால் அதன்பின் மங்கியதைப்போல சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றி வருகிறார். குறிப்பாக கடைசி 3 இன்னிங்ஸ்சில் 4, 14, 13 என்று சுமாரான ரன்கள் மட்டுமே எடுத்துள்ள அவர் இதுவரை 10 போட்டிகளில் 138 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

- Advertisement -

3. டைமல் மில்ஸ்: இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ் ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் தொடரில் அற்புதமாக செயல்பட்ட காரணத்தால் மும்பை அணி அவரை வாங்கியது. அந்த வகையில் 1/26, 3/35, 2/38 என இந்த வருடம் துவக்கத்தின் முதல் 3 போட்டிகளில் மிகச் சிறப்பாக பந்து வீசிய போதிலும் மும்பை வெற்றி பெற முடியவில்லை.

mills

ஆனால் அதன்பின் சொதப்ப தொடங்கிய அவர் 0/37, 0/54 என ரன்களை வாரி இறைத்ததன் காரணமாக மேற்கொண்டு வாய்ப்பு கொடுக்காத மும்பை அணி நிர்வாகம் அவரை பெஞ்சில் அமர வைத்து விட்டது.

4. அபினவ் மனோகர்: கர்நாடக இளம் வீரர் அபினவ் மனோகர் ஐபிஎல் தொடரில் ஹர்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணிக்காக 15* (7), 35 (21), 43 (28) என முதல் ஒருசில போட்டிகளில் மிடில் ஆர்டரில் அதிரடியாக ரன்களைக் குவித்ததால் வாசிம் ஜாஃபர் போன்ற நிறைய முன்னாள் வீரர்களின் பாராட்டுகளை அள்ளினார். ஆனால் அதன்பின் 0, 2, 12 என கடைசி 3 போட்டிகளில் சொதப்பி பெரிய ரன்களை எடுக்க தவறிய அவரை பெங்களூருக்குவுக்கு எதிரான போட்டியின் போது குஜராத் அணி நிர்வாகம் நீக்கியது.

Anuj Rawat

5. அனுஜ் ராவத்: பெங்களூர் அணிக்காக இந்த வருடம் தொடக்க வீரராக களமிறங்கிய இளம் வீரர் அனுஜ் ராவத் மேற்குறிப்பிட்டவர்களைப் போல் அல்லாமல் 21, 0, 26 என சுமாரான தொடக்கத்தை பெற்றாலும் அதன்பின் மும்பைக்கு எதிரான போட்டியில் 68 ரன்கள் குவித்து நம்பிக்கையை கொடுத்தார். ஆனால் அதன்பின் மீண்டும் சொதப்ப தொடங்கிய அவர் கடைசி 3 போட்டிகளில் 0, 4, 0 என அடுத்தடுத்து மோசமான ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் இனி வரும் போட்டிகளில் பெங்களூர் அணியில் இருந்து நீக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Advertisement