இங்கிலாந்து அணியில் இருந்து வெளியேறி அமேரிக்கா செல்ல உள்ள இங்கிலாந்து வீரர் – யார் தெரியுமா ?

Plunkett
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் திறமை இருந்தும் இடம் கிடைக்காமல் சில வீரர்கள் புலம்பெயர்ந்து அமெரிக்காவில் சென்று கிரிக்கெட் விளையாடுவதை தற்போது கடைப்பிடித்து வருகின்றனர். ஆனால் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியில் விளையாடி உலகக் கோப்பையை வெற்றி பெற்ற அணியிலிருந்து வீரர் ஒருவர் தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ளது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Plunkett 3

- Advertisement -

அதன்படி இங்கிலாந்து அணியை சேர்ந்த 36 வயது வீரரான லியாம் பிளங்கெட் கடந்த 2005ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகி தற்போது வரை 13 டெஸ்ட் போட்டிகள், 89 ஒருநாள் போட்டிகள் மற்றும் 22 டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார். இந்நிலையில் உள்நாட்டு கவுண்டி கிரிக்கெட் அணியிலிருந்து புலம் பெயர்ந்து தற்போது அமெரிக்கா செல்ல உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

36 வயதான இவர் ஏற்கனவே பல ஆண்டுகள் இங்கிலாந்து அணிக்காக விளையாடி இருந்தும் தற்போது தனது கிரிக்கெட் வாழ்வின் இரண்டாம் கட்டத்தை அமெரிக்காவில் தொடர உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் 2023 ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள மிகப்பெரிய டி20 தொடரில் விளையாட திட்டமிட்டு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

plunkett 1

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : நான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் அடுத்த பகுதிக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறேன். மேலும் அங்கு சென்று நடைபெற இருக்கும் டி20 லீக்குகளில் விளையாட இருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த “தி ஹன்ட்ரெட்” தொடரிலும் அவர் விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

plunkett 2

இங்கிலாந்து அணிக்காக நான் விளையாடிய நாட்கள் மிக சிறப்பானது. மேலும் நான் ஓய்வு பெற்ற பிறகு அமெரிக்க அணியை வளர்க்கவும் நான் தயாராக இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். இதுவரை இங்கிலாந்து அணிக்காக 13 டெஸ்ட் போட்டிகளில் 41 விக்கெட்டும், 89 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 135 விக்கெட்களையும், 22 டி20 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement