வீடியோ : டாப் டயருக்கு பறந்த நடப்பு ஐ.பி.எல் தொடரின் ப்ரம்மாண்ட சிக்சர் – எத்தனை மீட்டர் தெரியுமா?

Liam Livinstone Six
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 3-ஆம் தேதி நடைபெற்ற 48-ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நவி மும்பையில் நடைபெற்ற அபோட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 143/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் சுப்மன் கில் 9 (6), சஹா 21 (17), ஹார்டிக் பாண்டியா 1 (7), டேவிட் மில்லர் 11 (14), ராகுல் திவாடியா 11 (13) என அனைத்து பேட்ஸ்மேன்களும் வரிசையாக சொற்ப ரன்களில் சீரான இடைவெளிகளில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

இருப்பினும் 3-வது இடத்தில் களமிறங்கி சரிவை தாங்கிப்பிடிக்கும் வகையில் நங்கூரமாக நின்று கடைசி வரை அவுட்டாகாமல் காப்பாற்றிய இளம் தமிழக வீரர் சாய் சுதர்சன் 5 பவுண்டரி 1 சிக்சருடன் அரைசதம் கடந்து 65* (50) ரன்கள் எடுத்து குஜராத்தை ஓரளவு காப்பாற்றினார். பஞ்சாப் சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய ககிஸோ ரபாடா 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

பஞ்சாப் அதிரடி:
அதை தொடர்ந்து 144 என்ற சுலபமான இலக்கை துரத்திய பஞ்சாப்புக்கு தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ 1 (6) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினாலும் அடுத்து களமிறங்கிய ராஜபக்சாவுடன் கைகோர்த்த மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிரடியாக ரன்களை அடிக்கத் தொடங்கினார். 2-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதிசெய்த இந்த ஜோடியில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 40 (28) ரன்கள் எடுத்து ராஜபக்சா அவுட்டானாலும் மறுபுறம் சிறப்பாக பேட்டிங் செய்த ஷிகர் தவான் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 62* (53) ரன்கள் எடுத்தார்.

ஆனால் கடைசியில் களமிறங்கி அவரைவிட அதிரடியாக 2 பவுண்டரி 3 சிக்சர்களை பறக்கவிட்ட லியாம் லிவிங்ஸ்டன் 30* (10) ரன்களை எடுத்து மிரட்டலான பினிஷிங் கொடுத்ததால் 16 ஓவர்களிலேயே 145/2 ரன்கள் எடுத்த பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு 4 விக்கெட்டுகள் எடுத்து பந்துவீச்சில் முக்கிய பங்காற்றிய ரபாடா ஆட்டநாயகன் விருதை வென்றார். இதனால் பங்கேற்ற 10 போட்டிகளில் 5-வது வெற்றியைப் பதிவு செய்த பஞ்சாப் புள்ளி பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் பேட்டிங்கில் பெரிய ரன்களை எடுக்க தவறிய குஜராத் 10 போட்டிகளில் 2-வது தோல்வியை பதிவு செய்தாலும் தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

- Advertisement -

ப்ரம்மாண்ட சிக்ஸர்:
முன்னதாக இப்போட்டியில் 97/2 என்ற நிலையில் இருந்த பஞ்சாப்பின் வெற்றி உறுதியான வேளையில் களமிறங்கிய இங்கிலாந்து நட்சத்திர ஆல்ரவுண்டர் லியம் லிவிங்ஸ்டன் சீக்கிரமாக போட்டியை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிரடியாக பேட்டிங் செய்ய முயற்சித்தார். குறிப்பாக கடைசி 30 பந்துகளில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்ட போது அந்த ஓவரை இந்திய வீரர் முகமது சமி வீசிய நிலையில் முதல் 3 பந்துகளில் அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்டு ஹாட்ரிக் சிக்சர்களை தெறிக்கவிட்டார்.

அதோடு நிற்காத அவர் 4-வது பந்தில் மின்னல்வேக பவுண்டரியையும் 5-வது பந்தில் 2 ரன்கள் எடுத்து மீண்டும் 6-வது பந்தில் பட்டாசாக பவுண்டரியை பறக்க விட்டு அந்த ஒரே ஓவரில் 28 ரன்களை விளாசி பஞ்சாப்புக்கு வெறித்தனமான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். சொல்லப்போனால் அவரின் இந்த அதிரடியான ஆட்டத்தால் கூடுதலான ரன்ரேட்டை பெற்ற பஞ்சாப் 8-வது இடத்திலிருந்து 5-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியது. ஒருவேளை அவர் இந்த அதிரடி காட்டாமல் இருந்திருந்தால் பெங்களூருக்கு அடுத்தபடியாக 7-வது இடத்தில் இருந்திருக்க வேண்டும்.

- Advertisement -

பிரம்மாண்ட சிக்ஸர்:
அதைவிட முகமது சமி வீசிய முதல் 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர்களை தெறிக்கவிட்ட அவர் முதல் பந்திலேயே 117 மீட்டர் பிரம்மாண்ட சிக்ஸரை மைதானத்திற்கு டாப் டயருக்கு பறக்கவிட்டது பார்த்த அனைவரையும் மிரள வைத்தது. அவ்வளவு பெரிய சிக்சரை பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் அனைவரும் துள்ளி குதித்து எகிறிய நிலையில் பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால் வாய் மேல் கைவைத்து வியந்து போனார். அதை வர்ணனை செய்த கெவின் பீட்டர்சன் தனது வாழ்நாளில் பார்த்த பெரிய சிக்ஸர்களில் இது பிரம்மாண்டமானது என்று ஆச்சரியப்பட்டு வர்ணனை செய்தார்.

அத்துடன் அவ்வளவு பெரிய சிக்சரை பறக்க விட்ட லிவிங்ஸ்டன் தனது பேட்டில் ஸ்ப்ரிங் எதுவும் வைத்திருக்கிறாரா என்று குஜராத்தின் நட்சத்திர பவுலர் ரஷீத் கான் அந்த சிக்ஸருக்கு பின்பு அவரின் பேட்டை தொட்டு வியப்பில் பார்த்தார்.

இதையும் படிங்க : டெத் ஓவர்ல என்னா சூப்பரா பவுலிங் போடுறாரு அவரு. செம பவுலர்ங்க அவரு – இந்திய வீரரை பாராட்டிய ரபாடா

அதேபோல் அந்தப் பந்தை வீசிய முகமது சமி, குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் அவ்வளவு பெரிய சிக்சரை பார்த்து வாயைப் பிளந்த நிலையில் 117 மீட்டர் முரட்டுத்தனமான சிக்சரை பறக்கவிட்ட லியம் லிவிங்ஸ்டன் இந்த வருடம் ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய சிக்சரை பறக்க விட்ட வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

Advertisement