புவியும் வேணாம். வருணும் வேணாம். இந்த 2 பேரை அணிக்குள் கொண்டு வாங்க – லக்ஷ்மணன் கொடுத்த அட்வைஸ்

Laxman
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் நடப்பு டி20 உலக கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்ததன் காரணமாக இந்திய அணியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று பல்வேறு வீரர்களும் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி முக்கியமான இரண்டாவது லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்கின்ற காரணத்தினால் இந்திய அணியில் நிச்சயம் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

varun 1

- Advertisement -

அதுமட்டுமின்றி கடந்த போட்டியில் இந்திய அணியில் விளையாடிய பிளேயிங் லெவனில் சில வீரர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாததால் நிச்சயம் மாற்றம் செய்வதன் மூலமாக பலம் சேர்க்க வேண்டும் என்றும் பலர் கூறி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியில் இரண்டு வீரர்களை மாற்ற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ் லக்ஷ்மனன் தனது கருத்தினை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாகூரை அணியில் இணைத்தால் இந்திய அணியின் பவுலிங் பலம் பெறும். ஏனெனில் தற்போது புவி சற்று பார்ம் இழந்து காணப்படுகிறார். அதேவேளையில் தாகூர் சிறப்பாக பந்துவீசி விக்கெட் வீழ்த்துவது மட்டுமின்றி பேட்டிங்கிலும் அவரால் ஓரளவு தனது பங்களிப்பை வழங்க முடியும்.

ashwin

அதனை தொடர்ந்து வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக அஷ்வினை விளையாட வைக்கலாம். ஏனெனில் வருண் சக்கரவர்த்தி இப்பொழுதுதான் சர்வதேச கிரிக்கெட்டில் புதிதாக விளையாடி வருகிறார். ஆனால் ரவிச்சந்திரன் அஷ்வின் பல ஆண்டுகாலம் இந்திய அணிக்காக விளையாடி அனுபவம் உடையவர். எனவே இதுபோன்ற மிகப் பெரிய தொடரில் அவரது அனுபவம் நிச்சயம் இந்த அணிக்கு கைகொடுக்கும் என்பதனால் இந்த இரண்டு மாற்றங்களையும் செய்ய விரும்புவதாக லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : IPL 2022 : மெகா ஏலத்திற்கு முன் ஏலத்தில் வீரர்களை வாங்குவதற்கான புது ரூல்ஸை வெளியிட்ட – கிரிக்கெட் வாரியம்

எது எப்படி இருப்பினும் இன்றைய போட்டிக்கான அணி எவ்வாறு அமையும் என்பது டாஸிற்கு பிறகு தான் தெரியவரும். அணி நிர்வாகத்தின் சார்பாக வெளியான அறிக்கையில் இந்திய அணியில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படாது என்று ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement