திரும்ப திரும்ப அதே தப்ப பண்றாங்க. 2 வீரர்களை குறிப்பிட்டு கடிந்த லக்ஷ்மனன் – விவரம் இதோ

Laxman
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 364 ரன்களையும், இங்கிலாந்து அணி 391 ரன்கள் குவித்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணியின் சார்பாக துவக்க வீரர்களான ராகுல் 129 ரன்களையும், ரோகித் 83 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

இந்நிலையில் முதல் இன்னிங்சில் இந்திய அணி கண்ட சரிவு தான் தற்போது இரண்டாவது இன்னிங்சில் போது தடுமாறி வருவதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான வி.வி.எஸ் லட்சுமணன் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : முதல் இன்னிங்சின் போது ரோகித் மற்றும் ராகுல் ஆகியோர் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 126 சேர்த்தனர்.

அதன் பிறகு இந்திய அணி நிச்சயம் இது போன்ற ஒரு துவக்கம் கிடைத்த பிறகு 400 ரன்களை கடந்து இருக்கவேண்டும். ஆனால் மிடில் ஆர்டரில் மீண்டும் புஜாரா மற்றும் ரகானே ஆகியோரது செயல்பாடு மோசமாக இருந்தது. புஜாரா 9 ரன்களுக்கும், ரஹானே 1 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

Rahane

இது அவர்களுக்கு சற்று வருத்தமாகவும் இருக்கலாம். அவர்கள் இருவரது பார்ம் இந்திய அணிக்கு வருத்தமான விடயம் தான் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : முதல் இன்னிங்சின் போது நல்ல துவக்கம் கிடைக்கையில் அதை பெரிய ரன் குவிப்பாக மாற்ற வேண்டும் ஆனால் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் பேட்டிங் வீக்னஸ் உள்ளது. இந்த இன்னிங்சில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக ரஹானே மற்றும் புஜாரா ஆகியோரது செயல்பாடு வருத்தமளிக்கிறது. திரும்பத் திரும்ப அவர்கள் மீண்டும் அதே தவறை செய்வது போல தெரிகிறது என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். தற்போது இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 181 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement