சச்சின் மட்டுமல்ல நானும் பயந்த பவுலர் இவர் ஒருவர்தான் – லஷ்மணன் கருத்து

Laxman-1
- Advertisement -

இந்திய அணிக்காக 1996 ஆம் ஆண்டு அறிமுகமான விவிஎஸ் லட்சுமணன் .இவர் இந்தியாவிற்காக 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8500க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளார் இவரது சராசரி 45 ஆக இருக்கிறது. ஒருநாள் போட்டிகளில் பெரிதாக ஆடவில்லை என்றாலும் டெஸ்ட் போட்டிகளில் 2010ஆம் ஆண்டுவரை நிரந்தர இடம் பிடித்தவர்.

Laxman

மொத்தம் 17 சதங்களும் 56 அரை சதங்களும் விளாசியுள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அற்புதமாக ஆடுவதில் வல்லவர். டெஸ்ட் போட்டிகளில் இவரது அதிகபட்ச ரன் 281 .
இப்படி ஒரு வீரரை பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் நடுநடுங்க வைத்துள்ளார். இதுகுறித்து தற்போது அவர் பேசுகையில்..

- Advertisement -

எனது காலத்தில் சோயப் அக்தரை எதிர்கொள்வது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது . பிரட்லீயை விட அதிவேகமாக பந்து வீச கூடியவர் இவர். இவரை எதிர்கொள்வதை எப்போதுமே எனக்கு கடினமாகத்தான் இருந்தது என்று தெரிவித்துள்ளார் விவிஎஸ் லட்சுமணன். 229 சர்வதேச போட்டிகளில் ஆடி 460 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அக்தர்.

Akhtar

கடந்த 2013ம் ஆண்டு அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வர்ணனையாளராக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார் சோயிப் அக்தர். லட்சுமணன் 1996ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக ஆடி முதல் 2012 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

Laxman 1

ஏற்கனவே சச்சின் டெண்டுல்கரும் சோயப் அக்தரின் பந்து வீச்சை எதிர்கொள்ள என்று சற்று சிரமப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆன வி.வி.எஸ் லஷ்மணன் தான் சந்தித்த கடினமான பவுலராக அக்தரை தேர்வு செய்தது சுவாரஸ்யமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் இந்த கருத்திற்கு தற்போது கமெண்டுகள் குவிந்து வருகிறது.

Advertisement