சென்னை அணியை அடுத்து மும்பை அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு – விவரம் இதோ

MI

இந்த வருட ஐபிஎல் தொடர் தற்போது வரை பெரிய பெரிய சிக்கல்களை சந்தித்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இந்தியாவில் நடக்க வேண்டிய ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது.இதற்காக பல கோடி ரூபாய்கள் செலவு செய்து உயிர் பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாகதான் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள். இதில் கடுமையான கெடுபிடிகள், விதிகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

Dubai

அதனையும் தாண்டி சென்னை சூப்பர் கிங்ஸ் முகாமிற்கு கரோனா வைரஸ் தாக்கி 13 பேர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதனை தாண்டி பிசிசிஐ நிர்வாக குழுவில் இருக்கும் மெடிகல் கமிஷன் அதிகாரி ஒருவருக்கும் இந்த வைரஸ் தொற்று பாதித்துள்ளது. மேலும் இத்துடன் இல்லாமல் திடீரென சுரேஷ் ரெய்னா தனது அணிக்கு உள்ளாகவே சிறிய சண்டை போட்டுவிட்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிவிட்டார்.

அதனை தாண்டி தற்போது வரை நியூசிலாந்து இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணியில் இருக்கும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் இன்னும் வந்து சேரவில்லை. இப்படி இருக்க தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் லசித் மலிங்கா இணைத்த ஐபிஎல் தொடரில் இருந்து சொந்த விவகாரங்கள் காரணமாக விலகியுள்ளார்.

malinga 2

மேலும் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக அவரால் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் தற்போது தன் குடும்பத்துடன் இலங்கையில் இருக்கப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார். எப்போதும் மும்பை அணியின் பவுலிங்கில் வலுசேர்க்கும் அவர் இல்லாதது அந்த அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு என்றே கூறலாம். அந்த அளவிற்கு கடந்த பல ஆண்டுகளாக மும்பை அணிக்காக அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்தார்.

- Advertisement -

Malinga

அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் சேர்க்கப்பட்டிருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்தவர் லசித் மலிங்கா. 122 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 170 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். சென்ற வருடம் கூட கடைசி பந்தில் அந்த அணிக்காக கோப்பையை பெற்றுக் கொடுத்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.