டி20 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியில் விளையாட தயாராகும் ஜாம்பவான் – ரசிகர்கள் மகிழ்ச்சி

Malinga-2
- Advertisement -

ஏழாவது டி20 கிரிக்கெட் உலக கோப்பையானது வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடர் முதலில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிடையில் ஐபிஎல் தொடரின்போது வீரர்களிடையே கொரானா பரவியதையடுத்து, டி20 உலகக் கோப்பையை இந்தியாவில் நடத்தும் திட்டத்தை கைவிட்டது ஐசிசி. ஆனால் தற்போது வரை உலக கோப்பை தொடர் எந்த நாட்டில் நடைபெறும் என எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ஐசிசி வெளியிடவில்லை. இதற்கிடையில் இலங்கை அணியானது, இந்த உலகக் கோப்பை தொடருக்காக அந்த அணியின் மிகச் சிறந்த பந்து வீச்சாளரான லஷித் மலிங்காவை மீண்டும் அணிக்குள் கொண்டுவரும் திட்டத்தில் இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து பேசிய இலங்கை கிரிக்கெட் போர்டின் சேர்மேன் விக்ரமசிங்கே கூறியதாவது,

- Advertisement -

எங்களுடைய திட்டத்தில் நிச்சயமாக லஷித் மலிங்கா இருக்கிறார். 2021 மற்றும் 2022 என அடுத்தடுத்து வரும் இரண்டு டி20 உலகக் கோப்பையிலும் அவரை இலங்கை அணியில் விளையாட வைக்கும் முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். லஷித் மலிங்காவின் திறமையைப் பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும். மேலும் எங்கள் தேச அணிக்காக அவர் சிறப்பாக செயல்பட்டதை என்றைக்கும் மறக்கமாட்டோம். எங்களுடைய இந்த திட்டத்தைப் பற்றி இன்னும் இரண்டு நாட்களுக்குள்ளாக மலிங்காவிடம் பேசுவதாக உள்ளோம் என்று அவர் கூறினார்.

லஷித் மலிங்கா ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்த அவர், இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாகவே மும்பை அணியிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். எனவே மும்பை அணி இந்த ஆண்டு அவரை அணியிலிருந்து விடுவித்தது. லஷித் மலிங்கா கடைசியாக இலங்கை அணிக்காக 2020ஆம் ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் களமிறங்கி விளையாடிய பின்னர், எந்த ஒரு போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் தற்போது இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அவரை அணியில் சேர்க்கும் முடிவை எடுத்துள்ளது. இதைப் பற்றி மலிங்காவிடம் கேட்டபோது,

Malinga

நான், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெற்று இருக்கிறேனே தவிர டி20 போட்டிகளில் இருந்து அல்ல. என்னைப் போன்ற மூத்த வீரரிடமிருந்து அணிக்கு உண்டான சேவையை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் எவ்வாறு பெறப்போகிறது என்பதைக்காண ஆவலாக உள்ளேன். மேலும் எனது கிரிக்கெட் வாழ்க்கையில், நீண்ட இடைவெளிக்குப் பின்பு திரும்பி வந்து எனது நாட்டுக்காக சிறப்பாக செயல்பட முடியும் என்பதை நான் பலமுறை நிரூபித்துள்ளேன் என கூறியுள்ளார் லஷித் மலிங்கா.

Malinga

இலங்கை அணி டி20 உலகக் கோப்பைக்கு முன்னர், ஜூன் மாதம் இங்கிலாந்துடனும், ஜூலை மாதம் இந்தியாவுடனும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடர்களில் இலங்கை அணிக்காக மலிங்கா களமிறங்குவார் உன் எதிரபார்க்கப்படுகிறது. இதுவரை இலங்கை அணிக்காக 84 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 107 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

Advertisement