வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெயிலை வாழ்த்திய பிரைன் லாரா. – காரணம் இதுதான்

Lara
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவானான பிரையன் லாரா அந்த அணியின் கிறிஸ் கெய்லுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதன் காரணம் யாதெனில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை லாரா(10348 ரன்கள்) வைத்திருந்தார்.

அதனை இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கெயில் கடந்தார். 300 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கெயில் 10353 ரன்களை குவித்துள்ளார். இதன் காரணமாக பிரைன் லாரா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் என்று கெயிலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவேன் என்று அறிவித்திருந்தார் கெயில். ஆனால் அதைத் தொடர்ந்து தற்போது ஓய்வு அறிவிப்பை திரும்பப் பெற்று இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவேன் என்று ஏற்கனவே கூறியிருந்தார். அதன்படி ஒருநாள் தொடரில் விளையாடி வரும் கெயில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement