- Advertisement -
உலக கிரிக்கெட்

வார்னர் 400 அடிச்சதும் இதனை செய்யவேண்டும் என்று நினைத்தேன் – மனம்திறந்த லாரா

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி போட்டி அடிலெயிட் மைதானத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 589 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனை அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 306 ரன்களில் அவுட் ஆகி பாலோ ஆன் பெற்றது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் 239 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வார்னர் 400 ரன்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலிய கேப்டன் டீம் பெயின் அவருக்கு நேரத்தை கொடுக்காமல் டிக்ளேர் செய்தார். பெயின் எடுத்த இந்த முடிவு பெரிய சர்ச்சை ஆனது.

- Advertisement -

ஆனால் இன்னும் மேலும் ஒரு 30 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரமோ வார்னருக்கு கொடுத்திருந்தால் அவர் நிச்சயம் 400 அடித்திருப்பார் என்று ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த சூறாவளி ஆட்டம் குறித்து தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் லாரா கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

இதுவரை யாரும் 400 ரன்களின் அருகே வரவில்லை தற்போது வார்னர் நெருங்கி வந்தார். அவரின் வேகத்தை பாத்ததும் இன்று நிச்சயம் 400 ரன்களை அவர் கடப்பார் என்று நினைத்தேன் அதற்காக முதல் ஆளாக நானே அவரை பாராட்ட தயாராக இருந்ததாகவும் ஆனால் 335 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்ததும் ஏமாற்றம் அடைந்தேன். இப்போது என் சாதனை தப்பினாலும் மீண்டும் வார்னர் விரைவில் அதனை முறியடிப்பார் என்று லாரா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by