என்ன பொறுத்தவரைக்கும் அவர் அப்படி பண்ணதுல எந்த தப்பும் இல்ல – பிரைன் லாரா ஓபன்டாக்

Lara

கடந்த திங்கட்கிழமை நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரிட்சை மேற்கொண்டனர். இதில் முதலில் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 221 ரன்கள் பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கே எல் ராகுல் 50 பந்துகளில் 91 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக தீபக் ஹூடா 28 பந்துகளில் 64 ரன்களும், கிறிஸ் கெயில் 28 பந்துகளில் 40 ரன்களும் குவித்தனர். இதனையடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு எதிர்கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான பென் ஸ்டோக்ஸ் தனது இரண்டாவது பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

arshdeep 1

அவருக்குப் பின்னர் வோஹ்ராவும் 12 ரன்னில் வெளியேற ராஜஸ்தான் அணி ஒரு கட்டத்தில் மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் இருந்தது. பின்னர் ஜோஸ் பட்லர் உடன் ஜோடி போட்ட கேப்டன் சஞ்சு சாம்சன் மிக அதிரடியாக ஆட தொடங்கினார். இருந்தபோதிலும் ஜோஸ் பட்லரால் 25 ரன்கள் மட்டும் தான் குவிக்க முடிந்தது. பின்னர் வந்த சிவம் டுபே 23 மற்றும் ரியான் பராக் 25 ரன்கள் குவித்து சஞ்சு சாம்சனுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர். ஆனால் ஒரு முனையில் அதிரடியாக விளையாடி சதமடித்து ஆட்டத்தை இறுதி வரை எடுத்துச் சென்ற சாம்சன் கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக இறுதியில் ராஜஸ்தான் அணியால் 4 ரன்கள் எட்ட முடியாமல் போனது. பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிரடியாக சதமடித்து இறுதிவரை ஆட்டத்தை எடுத்து கொண்டு சென்ற சஞ்சு சாம்சன், கடைசி ஓவரில் ஒரு தவறை செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கடைசி ஓவரில் வெற்றி பெற 13 ரன்கள் தேவைப்பட்டது. அதிலும் குறிப்பாக கடைசி 2 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டும் தேவைப்பட்டது. அதில் 5 ஆவது பந்தை எதிர்கொண்ட சாம்சன் பந்தை தூக்கி அடித்தார். அது சிக்ஸராக போகும் என்று எதிர்பார்த்த நிலையில் பவுண்டரிக்கு முன்னே போய் விழுந்தது. மறுமுனையில் நின்றுகொண்டிருந்த கிறிஸ் மோரிஸ் வேகமாக சாம்சனை நோக்கி ஓடி வந்தார். ஆனால் ரன் எடுக்க மறுத்த சாம்சன் கிறிஸ் மோரிஸ் திரும்ப போக வைத்தார்.

Arshdeep

இதன் காரணமாக கடைசி பந்தில் மீண்டும் 5 ரன்கள் தேவைப்பட்டது. மீண்டும் பந்தை சாம்சன்
தூக்கி அடித்தார். ஆனால் அது கேட்ச் ஆகி விட கடைசி பந்தில் சாம்சன் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது குறித்து பேசிய பிரைன் லாரா : கடைசி ஓவரில் இரண்டு பந்துகளுக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தை மேற்கொண்ட சாம்சன் அதை சிக்சர் அடிக்க பார்த்தார் . அது சிக்ஸராக போகாத பட்சத்தில் அடுத்த பந்தையும் அவர் மேற்கொள்ள எடுத்த முடிவு சரியான முடிவுதான்.

- Advertisement -

samson 2

ஒரு வேளை இரண்டு ரன்களுக்கு அவர் ஓட முயற்சி செய்திருந்தால் ரன் அவுட் ஆகியிருப்பார். எனவேதான் கிரிஸ் மோரிஸ் இன் அழைப்பை அவர் மறுத்துவிட்டார். கடைசி பந்தில் நிச்சயமாக சிக்ஸர் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் துரதிஷ்டவசமாக அவர் தூக்கி அடித்த பந்து கேட்ச் ஆகி விட்டது. இதில் அவரது தப்பு எதுவும் இல்லை என்று இறுதியாக பிரைன் லாரா கூறி முடித்தார். அந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் 119 ரன்களை 63 பந்துகளில் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.