இந்திய அணியின் அடுத்த கட்ட வீரர்களாக பார்க்கப்படுபவர்கள் சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள். இதிலும் குறிப்பாக சஞ்சு சம்சன் மற்றும் ரிஷப் பண்ட் அவர்கள் தோனிக்கு மாற்றாக விக்கெட் கீப்பராக விளையாடி வருவதால் அவரது ஆட்டம் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது .
குறிப்பாக ரிஷப் பண்ட் இடதுகை ஆட்டக்காரர் மற்றும் விக்கெட் கீப்பர். அதிரடியாக ஆடுவதிலும் கைதேர்ந்தவர் என்பதால் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரிலும் கடந்த நான்காண்டுகளாக அதிரடியாக விளையாடி வருகிறார்.
எப்போதும் லெக் திசையில் அடித்து துவம்சம் செய்வதில் வல்லவர். இந்தத் திசையில்தான் அதிகம் பவுண்டரி மற்றும் சிகசர்கள் அடிப்பார். ஆனால் சமீபகாலமாக அவர் ஆப்சைடு ஆடுவதற்கும் தன்னை தயார்படுத்திக் விளையாடி வருவதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் : டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு மிகப்பெரிய ஒரு சொத்தாக இருக்கிறார். தற்போது அவர் தனது ஆட்டத்தை மேம்படுத்தி விட்டார். நான் பார்க்க தொடங்கிய காலகட்டத்தில் லெக் திசையில்அதிரடியாக ஆடுவதில் வல்லவர். ஆனால் தற்போது ஆப் சைடிலும் நன்றாக ஆடி பயிற்சி செய்து வருகிறார்.
பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வந்து தன்னை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரது பேட்டிங்கில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது இனி அவரது ஆட்டத்தை நாம் சரவெடியாக பார்க்கப் போகிறோம் என்றும் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் அவர் திகழ்வார் என்று தெரிவித்திருக்கிறார் பிரையன் லாரா.