யார் தடுத்தாலும் இவரை நிறுத்தமுடியும். இந்திய அணியின் ரன் மெஷின் இவர்தான் – லாரா புகழாரம்

Lara
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளையும் ஒரு தோல்வி மற்றும் ஒரு போட்டி மழை காரணமாக ரத்து என 13 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

india

- Advertisement -

இந்திய அணி இந்த தொடரில் உலக கோப்பையை கைப்பற்றும் என்று அனைவரும் கருத்து தெரிவித்து வரும் இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் லாரா இந்திய அணியின் கேப்டன் கோலி குறித்து ஒரு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : கோலி இந்திய அணிக்காக பல ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறார். அவரைப் போன்று ஒரு வீரர் இந்திய அணிக்கு கிடைப்பது மிகவும் அரிது. தொடர்ந்து ரன்களை குவித்து வரும் கோலி இந்திய அணியின் ரன் மெஷின் ஆகா இருக்கிறார்.

Kohli

நான் கூறுகிறேன் சந்தேகம் இல்லாமல் இந்தத் தொடரிலும் ரன்களை அடித்து குவிப்பதுடன் தொடரை கைப்பற்றி கொடுப்பார் மேலும் இப்போது உள்ள வீரர்களில் உலகிலேயே தலை சிறந்த வீரர் என்பதை நான் உறுதியாக கூறுவேன் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement