கைக்கு வந்த எளிதான மேட்சை கொல்கத்தா அணி தோற்க அவர்கள் செய்த இந்த தவறே காரணம் – லாரா கொதிப்பு

Lara

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது டி20 போட்டியில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய மும்பை அணி 152 ரன்கள் குவிக்க 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்கு கொல்கத்தா அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மும்பை அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தினர்.

chahar

கொல்கத்தா அணி பெற்ற இந்த மோசமான தோல்விக்கு பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா இந்த தோல்வி குறித்து சரமாரியாக கொல்கத்தா அணியை தன் பங்கிற்கு சரமாரியாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : மும்பை அணி செய்த பிளஸ் என்னவென்றால் சரியான பவுலர்களை சரியான நேரத்தில் பந்துவீச செய்து வெற்றி பெற்றனர். இரண்டாவது இன்னிங்சில் கொல்கத்தா அணி நெருக்கடி நெருக்கடி ஏற்பட காரணம் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டம்தான்.

karthik

சென்னை மைதானம் எப்பொழுதுமே ஒரு ஸ்லோ டிராக் தான். அந்த ஆடுகளத்திற்கு ஏற்றவாறு பேட்ஸ்மேன்கள் விளையாடவேண்டும். களத்திற்கு வந்ததும் அதிரடி ஷாட்டுகளை விளையாடி அவர்களால் ரன்களை குவிக்க முடியாது. எனவே ஆடுகளத்தின் தன்மையை அறிந்து அதன்படி விளையாட வேண்டும். ஆனால் கொல்கத்தா அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தும் அதனை மாற்ற தவறிவிட்டனர்.

- Advertisement -

karthik

இந்த போட்டியில் கொல்கத்தா அணி பெற்ற தோல்விக்கு முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களின் கவனக் குறைவு தான் காரணம். அதுவே அவர்களுக்கு தோல்வியையும் தந்துவிட்டது. விக்கெட்டுகளை ஏதோ பரிசளிப்பது போல அவர்கள் தாரை வார்த்தனர். 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்கை கூட அவர்கள் எட்ட முடியாமல் போனது வருத்தம் அளித்தது என்று லாரா கூறியது குறிப்பிடத்தக்கது.