LARA : நெஞ்சுவலி காரணமாக மும்பை மருத்துவமனையில் லாரா அனுமதி – தற்போதைய செய்தி

Lara
- Advertisement -

உலக கோப்பை தொடர் போட்டிகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் உலகக்கோப்பை போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

lara

- Advertisement -

அதன்படி இந்தியாவில் ஒளிபரப்பப்படும் கிரிக்கெட் போட்டிகளில் விமர்சனம் செய்யவும், போட்டிக்கிடையே விவாதம் செய்யவும் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை சேர்ந்த முன்னாள் வீரரான பிரைன் லாரா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஆனார்.

அதன்படி உலக கோப்பை தொடர் முடியும் வரை இந்தியாவில் இருந்து போட்டியை வர்ணனை மற்றும் விவாதம் போன்று பல நிகழ்ச்சிகளை அவர் செய்வதற்காக இந்தியாவில் தங்கி உள்ளார். தற்போது அவருக்கு சூட்டிங்கின்போது நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

worldcup 1

சிறிது நேர சிகிச்சைக்கு பிறகு லாராவின் உடல்நிலை குறித்து கருத்து தெரிவித்த டாக்டர் : அவர் நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பதாலும், உணவினை நேரம் மாற்றி உட்கொள்வதாலும் அவருக்கு அழுத்தத்தால் நெஞ்சுவலி வந்து உள்ளது. அவர் தொடர்ந்து அவர்களே பணிகளைச் செய்யலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது மும்பையில் தங்கியிருக்கும் லாரா அங்கிருந்து உலக கோப்பை முடியும் வரை கிரிக்கெட் சார்பான பணிகளை துடர்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்காக செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement