இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பளித்திருக்கலாம். அவரின் திறமையை நான் நேரில் பார்த்திருக்கிறேன் – லாரா பேட்டி

Lara

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சூரியகுமார் யாதவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா கருத்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர் சூர்யகுமார் யாதவ். இவர் தனது அணிக்காக சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு எடுத்துச்சென்றதில் பெரும் பங்கு வகித்துள்ளார்.

sky 2

இதையடுத்து ஆஸ்திரேலியா இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் இவர் இடம்பெறாதது தனக்கு கவலை அளிப்பதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டி மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்நிலையில் முதல் டெஸ்ட் தொடருக்கு பின்னர் விராத் கோலி தனது மனைவியின் குழந்தை பிறப்புக்காக தாயகம் திரும்பவுள்ளார். இந்நிலையில் ஒருநாள் தொடருக்கான அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் எதிர்பார்த்துவந்தனர். இது குறித்து சூர்யகுமார் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தாம் தேர்வு செய்யப்படாதது ஏமாற்றமாக இருந்தாலும் தனக்கான வாய்ப்புக்காக காத்திருப்பதாக அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

sky

இதையடுத்து அவர் இந்திய அணியில் இடம்பெறாதது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருக்கிறது. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக எந்த பேட்டிங் ஆர்டரில் இறங்கினாலும் தனது திறமையான ஆட்டத்தால் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்ற சூர்யகுமார் யாதவ் தற்போது இந்திய அணியில் இடம்பெறாதது அவருக்கும் பெரும் கவலை அளிப்பதாக இருந்து வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து பிரைன் லாரா கூறியதாவது : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெறாதது தனக்கு வருத்தமளிப்பதாக தெரிவித்திருந்தார்.நடந்த முடிந்த ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதெல்லாம் தோல்வியைத் தழுவும் நிலையில் இருந்ததோ அப்போது சூர்யகுமார் யாதவ் தனது திறமையான ஆட்டத்தால் மும்பை அணியை வெற்றிப்பாதைக்கு எடுத்துச்சென்றதை யாராலும் மறக்க முடியாது எனவும் பிரைன் லாரா கருத்து தெரிவித்திருக்கிறார்.

SKY

சூரியகுமார் யாதவ் போல் ஒரு வீரர் இந்திய அணியில் இருந்தால் அணியின் பலம் மேலும் அதிகரிக்கும் எனவும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா கருத்து தெரிவித்துள்ளார்.