இந்த ஐ.பி.எல் தொடரில் லாராவின் மனம் கவர்ந்த 5 இளம்வீரர்கள் – லிஸ்ட் இதோ

Lara

நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதும் இளம் வீரர்களின் தொடராகத்தான் அமைந்தது. பல இளம் வீரர்கள் மிகச்சிறப்பாக தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள். தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய், தங்கராசு நடராஜன், வருன் சக்ரவர்த்தி போன்ற பல வீரர்கள் அற்புதமாக விளையாடி பலரது கவனத்தை ஈர்த்தனர். அந்த வகையில் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா தன்னை ஈர்த்த வீரர்கள் பற்றி பேசியிருக்கிறார்.

சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் :

வழக்கம்போல் இந்த ஐபிஎல் தொடரிலும் நன்றாக விளையாடினார். சஞ்சு சாம்சன் 14 போட்டிகளில் விளையாடி 158.89 என்ற ஸ்ட்ரைக் ரேட் வைத்து 375 ரன்கள் குவித்திருக்கிறார். இந்திய டி20 அணியிலும் இடம் பிடித்துவிட்டார்.

Padikkal 3

தேவ்தத் படிக்கல்(ஆர்சிபி) :

- Advertisement -

கர்நாடகாவைச் சேர்ந்த இளம் அதிரடி வீரர் இவர். பெங்களூரு அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி 14 போட்டிகளில் 475 ரன்கள் குவித்து விட்டார்.

sky 2

சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) :

30 வயதான சூர்யகுமார் யாதவ் உள்ளூர் போட்டிகளில் நன்றாக ஆடுவதைப் போல ஐபிஎல் தொடரிலும் பட்டையை கிளப்பியிருக்கிறார். வெகு சீக்கிரத்தில் இவர் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று சவுரவ் கங்குலியையே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Rahul

கேஎல் ராகுல் (பஞ்சாப்) :

இந்த வருட ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக ஆடிய கே எல் ராகுல் 670 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி சென்றுவிட்டார்.

பிரியம் கர்க் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) :

சன் ரைசர்ஸ் அணியின் இளம் வீரரான இவர் அந்த அணிக்காக அதிரடியாக ஆடி கடைசியில் வந்து அணியை வெற்றி பெற வைத்து அசத்தி இருக்கிறார். இந்த ஆட்டம் பிரையன் லாராவை கவர்ந்துவிட்டது.