என்னுடைய காலத்தில் மிகச்சிறந்த 5 பெஸ்ட் பேட்ஸ்மேன்ஸ் இவர்கள்தான். லாரா தேர்வு – லிஸ்ட் இதோ

Lara

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் ஒருவர் ஆவார். பிரைன் லாரா 1990ல் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் வடிவிலான தொடர்களில் விளையாடியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 137 சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலும் 299 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார் லாரா. தான் விளையாடிய காலத்தில் சமகால சிறந்த பேட்ஸ்மேனான சச்சினின் நிகரான புகழ் பெற்றவர்.

Lara

டெஸ்ட் போட்டிகளில் 52.88 சராசரியை பெற்று 11,953 ரன்களையும், ஒருநாள் போட்டிகளில் 40.48 சராசரியை பெற்று 10,405 ரன்களையும் குவித்திருக்கிறார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 53 சதங்களை விளாசியுள்ளார் பிரையன் லாரா. டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் பிரைன் லாரா 400 ரன்களை குவித்து மிகப்பெரிய சாதனை படைத்திருந்தார்.

இந்த சாதனையை தற்போது வரை எந்த வீரரும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனது வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கடினமான சூழ்நிலையில் பல்வேறு வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். டெஸ்ட் வடிவத்தில் பிரைன் லாரா இந்திய அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கரை விட சிறந்த பேட்ஸ்மேனாக பாராட்டப்படுகிறார். சச்சினும் பலமுறை சிறந்த பேட்ஸ்மேன் என்று லாராவை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Lara 1

இவர் தனது பேட்டிங் மூலம் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இந்நிலையில் பிரைன் லாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமகாலத்தில் தான் எதிர்த்து ஆடியதில் மிகச் சிறந்த 5 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்ட அந்த 5 பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான் :

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ் மற்றும் சங்கக்கரா ஆகிய 5 பேட்ஸ்மேன்கள் தான் சந்தித்து விளையாடியதில் மிகச் சிறந்த 5 பேட்ஸ்மேன்கள் என்று பிரைன் லாரா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.