வார்னருக்கு வாழ்த்து சொல்ல ஆஸ்திரேலியாவுக்கு நேரில் சென்ற பிரபலம்

Warner-1
- Advertisement -

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த அதிரடி தொடக்க வீரரான வார்னர் 335 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இந்த போட்டியில் அவர் 400 ரன்களை எடுக்க முடியும் சூழ்நிலை இருந்தாலும் ஆஸ்திரேலிய கேப்டன் டிக்ளேர் செய்தது சர்ச்சையானது.

மேலும் ரசிகர்கள் இணையத்தில் வார்னருக்கு சிறிது நேரம் கொடுத்துவிட்டு டிக்ளேர் அறிவிப்பை எடுத்திருந்தால் வார்னருக்கு இன்னும் சிறிது நேரம் கிடைத்திருந்க்கும் அவர் நிச்சயம் 400 ரன்களை அடித்து மிகப்பெரிய சாதனை படைத்திருப்பார். இனி ஒரு வாய்ப்பு அவருக்கு எப்பொழுது வரப்போகிறது என்பது தெரியவில்லை. எனவே பெயின் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் என்பது போல அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் அணியின் நலனுக்காகவே தான் டிக்ளேர் அறிவித்ததாக டிம் பெயின் தெரிவித்தார். இந்நிலையில் இந்த போட்டியில் வார்னர் ஆட்டத்தை கண்ட மேற்கிந்திய அணியின் முன்னாள் வீரர் லாரா அவரை ஏற்கனவே ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தற்போது நேரில் ஆஸ்திரேலியா சென்று அவரை சந்தித்த லாரா வார்னருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை தற்போது வார்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மேலும் இவரை சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி நான் நிச்சயம் மீண்டும் ஒரு முறை வாய்ப்பு கிடைக்கும்போது 400 ரன்களை அடிப்பேன் என்று பதிவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement