வார்னருக்கு துரோகம் செய்துவிட்டார்கள். இப்படி செய்து இருக்கக்கூடாது – லாரா புலம்பல்

Lara

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியை எளிதாக வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

Warner

அந்த போட்டியின் முதல் இன்னிங்சின் போது ஆஸ்திரேலிய அணியின் வீரரான வார்னர் ஆட்டமிழக்காமல் 335 ரன்கள் குவித்தார். அவரின் இந்த ஆட்டத்திற்கு உலகம் முழுவதும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்க டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த சாதனையாளரான லாரா அவர் சாதனை குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

ஆஸ்திரேலிய அணி வெற்றியை கருத்தில் கொண்டு முடிவை எடுத்து இருந்தாலும் தற்போது அது தவறு என நான் நினைக்கிறேன். ஏனெனில் ஆட்டம் ஐந்து நாட்கள் நடக்காமல் ஒருநாள் முன்னதாக முடிந்தது. எனவே கூடுதலாக ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் கொடுத்திருந்தால் அவர் என்னுடைய சாதனையை முறியடித்திருப்பார். என்னுடைய சாதனையை அவர் தகர்க்க வேண்டும் நான் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

Warner-1

ஆனால் அப்படி ஒரு நேரத்தை அவர்கள் தரவில்லை நிச்சயம் அவருக்கு அந்த நேரத்தை கேப்டன் கொடுத்திருக்க வேண்டும் ஏனெனில் இனி டெஸ்ட் போட்டிகளில் அவ்வளவு ரன்களை அடிக்க எவ்வளவு நாட்கள் ஆகும் என்று உறுதியாக கூறமுடியாது என்று லாரா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -