லாரா மற்றும் சர்வானின் உதவியை நாடும் வெஸ்ட் இண்டீஸ். இந்தியாவிற்கு போடப்படும் மாஸ்டர் ஸ்கெட்ச் – காரணம் இதுதான்

- Advertisement -

இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் தற்போது விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒரு நாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டெஸ்ட் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோத இருக்கிறது.

Iyer-2

- Advertisement -

இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 22ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி 30ஆம் தேதியும் தொடங்க உள்ளன. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அந்த அணியை பலப்படுத்தும் விதமாக அந்த அணியின் முன்னாள் வீரரான சர்வான் மற்றும் லாராவிடம் ஆலோசனை நடத்தி உள்ளது.

அதன்படி இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் முன்னர் லாரா மற்றும் சர்வான் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு சிறப்பு பயிற்சியும், ஆலோசனையும் வழங்க உள்ளனர். ஏனெனில் அவர்கள் இருவரும் பல டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி உள்ளனர் மேலும், அவர்களின் அனுபவம் வீரர்களுக்கு கைகொடுக்கும்.

WI

எனவே இவர்கள் கொடுக்கும் ஆலோசனை மற்றும் பயிற்சிகள் அந்த அணி இளம் வீரர்களுக்கு மிகவும் உதவும் என்பதால் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக இவர்கள் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்க உள்ளனர். அவர்களின் ஆலோசனை மூலம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் சிறப்பாக விளையாட வாய்ப்பு இருக்கும் என்று மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி நிர்வாகம் நம்புகிறது.

Advertisement