பண்ட்டை குறைத்து மதிப்பிடாதீர்கள். அவர் நிச்சயம் இதனை சாதிப்பார் – க்ளுஸ்னர் நம்பிக்கை

Pant

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரை வெற்றிகரமாக முடித்து அடுத்த தொடருக்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

Pant

கடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் அந்த தொடர் முழுவதும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் மிக சாதாரணமாக விளையாடினார். இந்நிலையில் ரிஷப் பண்ட் குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வீரரான க்ளுஸ்னர் தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : ரிஷப் பண்ட்டின் திறமையை யாரும் குறைத்து பேச வேண்டாம் ஏனெனில் அவர் உண்மையில் மிகுந்த திறமையான ஒரு ஆட்டக்காரர். அவருடைய சராசரியை ரன்களை வைத்து அவரின் திறமையை நீங்கள் எடை போடக்கூடாது. அவரிடமிருந்து நிச்சயம் பெரிய ரன் குவிப்பு விரைவில் வரும் அவர் மிகச்சிறந்த வீரர்.

Pant

மேலும் அவர் தான் எங்கு தவறு செய்கிறோம் என்ற இடத்தை கற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டால் அவர் நிச்சயம் சிறந்த வீரராக மாறிவிடுவார். மேலும் தன்னுடைய குறைகளை போக்கி அவருடைய ஆற்றத்திறனை மேம்படுத்தி அவர் மற்றவர்கள் நம்பும் வகையில் ஒரு பெரிய வீரராக விரைவில் உருவெடுப்பார் என்றும் தோனி விட்டுச்சென்ற இடத்தை பிடித்துக் கொள்ள முக்கியமான வீரராக பண்ட் இருப்பார் என்றும் க்ளுஸ்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.