- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கோலியும் ஃபார்முக்கு வந்துட்டாரு.. அவர் மட்டும் சதமடிச்சா.. இரக்கமற்ற இந்தியா கோப்பை வெல்லும் ராஜ்புத் பேட்டி

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடி வருகிறது. அதில் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடும் இந்தியா தங்களது முதல் 2 போட்டிகளில் வங்கதேசம் மற்றும் நடப்புச் சாம்பியன் பாகிஸ்தானை வீழ்த்தியது. அந்த அடுத்தடுத்த வெற்றிகளால் செமி ஃபைனல் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள இந்திய அணி விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிராக சதத்தை அடித்து ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பியது இந்திய அணிக்கு பெரிய பலம் என்று முன்னாள் மேனேஜர் மற்றும் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத் தெரிவித்துள்ளார். விராட் போல ரோஹித் சர்மாவும் சதத்தை அடித்தால் இந்திய அணியில் அனைத்துக் கட்டங்களும் நிரப்பப்படும் என்று அவர் கூறியுள்ளார். எனவே எதிரணிகளுக்கு இரக்கத்தைக் காட்டாமல் செயல்படும் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் என்று அவர் உறுதியாக கூறியுள்ளார்.

- Advertisement -

இரக்கமற்ற இந்தியா:

2007 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் மேனேஜராக இருந்த ராஜ்புத் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்த இந்திய அணி இரக்கமற்றது போல் தெரிகிறது. அவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் டாமினேட் செய்து வெற்றியைப் பெற முயற்சிக்கிறார்கள். அவர்கள் எதிரணி கம்பேக் கொடுப்பதற்கான வாய்ப்பை வழங்க விரும்புவதில்லை”

“இந்த மாதிரியான அணுகுமுறையைப் பின்பற்றி விளையாடும் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை தாராளமாக வெல்லும் என்று நான் நினைக்கிறேன். விராட் கோலி சதத்தை அடித்துள்ளார். அனைத்து கட்டங்களும் நிரப்பப்பட்டுள்ளன. தற்போது ரோகித் மட்டுமே சதமடிக்க வேண்டும். விராட் கோலி தன்னுடைய கிளாஸ் காண்பித்து சிறப்பான இன்னிங்ஸ் விளையாடினார்”

- Advertisement -

கோப்பை வெல்லும்:

“அவர் கிங் கோலி என்பதை மீண்டும் பெரியப் போட்டியில் அசத்தி நிரூபித்துள்ளார். கிரிக்கெட்டில் நீங்கள் எந்தப் போட்டியையும் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. 2 போட்டிகளில் கச்சிதமாக வென்றாலும் நியூசிலாந்தை நாம் எளிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. அவர்கள் பாகிஸ்தான், வங்கதேசத்தை விட வலுவானவர்கள். நம்மைப் போலவே முதல் 2 போட்டிகளில் வென்றுள்ள அவர்களது தன்னம்பிக்கையும் உயர்வாக இருக்கும்”

இதையும் படிங்க: சச்சின், ஏபிடி, சங்ககாராவை விட விராட் கோலி அதுல சிறந்த பேட்ஸ்மேன்.. மைக்கேல் ஆதர்டன், நாசர் ஹுசைன்

“இந்திய அணி நன்றாக செயல்படும் போது அவர்கள் புதிதாக முயற்சிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். யாராவது காயத்தைச் சந்திக்கும் வரை அல்லது ஓய்வெடுக்கும் சூழ்நிலை ஏற்படும் வரை அணியில் மாற்றங்கள் இருப்பதற்கு வாய்ப்பில்லை. வெற்றி பெறும் அணியை நீங்கள் மாற்றம் செய்யாமல் அப்படியே தொடர வேண்டும் என்றே நானும் சொல்வேன்” எனக் கூறினார்.

- Advertisement -